China president Xi Jinping visits Tamil Nadu live updates : சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இந்தியா வருகை புரிகிறார். நேரடியாக சென்னை வரும் அவர், அங்கிருந்து பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில் தலைநகராக திகழ்ந்த கடற்கரை நகரமான மாமல்லபுரத்திற்கு செல்கிறார். அவர் வருகையை ஒட்டி சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேளச்சேரி - கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்கள் சேவை தேவைக்கேற்ப சிறிது நேரம் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போன்று கிண்டி ரயில் நிலையத்திலும், பல்லாவரம் ரயில் நிலையத்திலும் சிறிது நேரம் ரயில் சேவைகள் தேவைக்கேற்ப ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை வழிப்போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
????LIVE Now: PM @narendramodi and President Xi Jinping visit various cultural monuments in #Mamallapuram
Watch on #PIB's
YouTube: https://t.co/xdHjjKuyf8
Facebook: https://t.co/7bZjpgpznY https://t.co/4R2qrwrz2G
— PIB India (@PIB_India) October 11, 2019
நேற்று கலைநிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, இந்தியப் பிரதமர், சீன அதிபருக்கு இரவு உணவு விருந்து அளித்தார். பின், இரு தலைவர்களுக்கும் நடந்த பேச்சு வார்த்தை இரவு 9.40 மணி வரைக்கும் சென்றது. அமைப்பாளரகள் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தலைவர்கள் முழுமையான பேச்சுவார்த்தைக்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் வரும் சீன அதிபர் குறித்த அனைத்து லேட்டஸ் அப்டேட்களையும் ஆங்கிலத்தில் படிக்க
Live Blog
Xi Jinping visits Tamil Nadu live updates : சீன அதிபர் வருகை, மாமல்லபுரம் பயணம், இந்திய தலைவர்களின் பங்கேற்பு போன்ற இன்றைய நிகழ்ச்சி நிரல்களின் அனைத்து தகவல்களையும் இங்கு நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
மகாபலிபுரத்தில் நடந்துக் கொண்டிருக்கும் இரண்டாவது இன்பார்மல் உச்சிமாநாட்டில் நேற்று இந்தியப் பிரதமர் மோடியும், சீனா அதிபர் ஜின்பிங்க்கும் நடந்த பேச்சு வார்த்தை இரவு 9.40 மணி வரைக்கும் நடைபெற்றது. பயங்கரவாதத்தின் காரணமாக இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும், வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டதாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
மகாபலிபுரத்துக்கு வருகை தந்துள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் இன்றைய விருந்தில் தென்னிந்திய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. அதில் தக்காளி ரசம், தஞ்சாவூர் கோழி கறி ஆகியவை இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு: மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நிகழ்ச்சி முடிந்தவுடன் புறப்பட்டுச் சென்றனர்.
Tamil Nadu: Prime Minister Narendra Modi & Chinese President Xi Jinping leave after attending a cultural program at the Shore Temple in Mahabalipuram. pic.twitter.com/Aa5cWT5FW7
— ANI (@ANI) October 11, 2019
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இருவருக்கும் மாமல்லபுரத்தில் விருந்து சுமார் 7 மணிக்கு தொடங்கியது. அதற்கு அடுத்த 2 மணி நேரங்களுக்குப் பிறகு அவர்களுடைய உரையாடல் இன்னும் தொடர்கிறது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
Sources: Prime Minister Narendra Modi & Chinese President Xi Jinping’s dinner began at approximately 19:00 hrs today in Mahabalipuram and their conversation is still continuing after two hours. #TamilNadu pic.twitter.com/L1TQT9JAt4
— ANI (@ANI) October 11, 2019
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலில் கலாச்சார நிகழ்ச்சி அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பிரார்த்தனையுடன் முடிவடைந்தது என்று MEA செய்தித் தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார். பிரதமர் மோடியும் ஷியும் இப்போது ஒரு விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.
The cultural programme ended with a prayer for peace and harmony. pic.twitter.com/XS2JTa7mws
— PMO India (@PMOIndia) October 11, 2019
மகாபலிபுரத்திற்கு வருகை தந்துள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி, நாச்சியர்கோயில் அன்னம் விளக்கு மற்றும் நடனம் ஆடும் சரஸ்வதி தஞ்சாவூர் ஓவியத்தை பரிசளித்தார்.
Gifts to Chinese President Xi Jinping from Prime Minister Narendra Modi: Nachiarkoil -Branched Annam Lamp and Thanjavur Painting-Dancing Saraswathi. pic.twitter.com/F1Sr5ttFZ3
— ANI (@ANI) October 11, 2019
மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ரசித்து வருகின்றனர். பாரம்பரிய கலையான நாட்டியம் குறித்து அறிமுக உரை சீன மொழியில் மொழிபெயர்த்து வழங்கப்பட்டது
'வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கடற்கரை கோயில்'
மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்...!
* பாரம்பரிய கலையான நாட்டியம் குறித்து அறிமுக உரை சீன மொழியில் மொழிபெயர்த்து வழங்கப்பட்டது | #PMModi #XiJingping pic.twitter.com/lBIO1F5k2T
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 11, 2019
‘மின்னொளியில் ஜொலிக்கும் கடற்கரை கோயில்’
மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலுக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்றுள்ளனர்.
Tamil Nadu: Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping at the Shore Temple in Mahabalipuram. pic.twitter.com/uEh2oxEuNk
— ANI (@ANI) October 11, 2019
வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டுடன் வருகை தந்த, சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு கைக்குலுக்கி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு, மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பகுதியில் சிற்பங்களை சீன அதிபருக்கு மோடி விளக்கிக் கொண்டிருக்கிறார்.
PM @narendramodi and President #XiJinping take a stroll through the ancient Cave Temple, a @UNESCO world Heritage site in #Mamallapuram#ModiXiSummit #ModixijinpingMeet pic.twitter.com/jelmWFBvmM
— PIB India (@PIB_India) October 11, 2019
சென்னை ஐடிசி ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு சீனஅதிபர் செல்லும் காருடன் 20 வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.
மாமல்லபுரம் அர்ச்சுணன்தபசு பகுதியில் சீன அதிபரை வரவேற்கவுள்ளார் பிரதமர் மோடி.
2 நாடுகளுக்கிடையே வர்த்தக மேம்பாடு, எல்லையில் அமைதி உள்ளிட்டவை பற்றி 2 பேரும் பேசவாய்ப்பு.
கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜின்பிங். வழி நெடுகிலும் இரு நாட்டு கொடிகளை அசைத்து மக்கள் உற்சாக வரவேற்பு.
Tamil Nadu: Chinese President Xi Jinping leaves for Mahabalipuram from Chennai. Xi Jinping and Prime Minister Narendra Modi will hold their second informal summit in the city, later today. https://t.co/C61dGXSxrV pic.twitter.com/kSX5Cuik3H
— ANI (@ANI) October 11, 2019
மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார்
மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் சென்றடைகிறார்
மாலை 5 மணி முதல் 6 மணி வரை பிரதமருடன் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக்கோயிலைப் பார்வையிடுகிறார்
மாலை 6 மணி முதல் 6.30 வரை கலாச்சார நிகழ்ச்சி கடற்கரைக் கோயில் வளாகத்தில்.
மாலை 6.30 மணி முதல் 6.45 வரை அறையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மாலை 6.45 மணி முதல் இரவு 8 மணிவரை பிரதமருடன் தனிப்பட்ட முறையில் இரவு விருந்து கடற்கரைக் கோயில்.
இரவு 8.05 மணிக்கு மாமல்லபுரத்திலிருந்து ஐடிசி சோழா ஓட்டலுக்கு சாலை மார்க்கமாக கிளம்புகிறார்
இரவு 9 மணிக்கு கிண்டி ஐடிசி சோழா ஓட்டலுக்குத் திரும்புகிறார்.
இரவு ஓய்வு.
சீன அதிபர் ஜின்பிங் சென்னை வந்திறங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், 5 திபெத்தியர்கள் அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Five Tibetans protested outside Chennai airport taken in custody hours before Chinese President Xi's arrival @IndianExpress
— Arun Janardhanan (@arunjei) October 11, 2019
மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங், தற்போது சென்னை வந்துள்ளார். இன்னும் சிறிதுநேரத்தில் மாமல்லபுரம் புறப்பட்டு செல்ல உள்ளார். இன்று இரவு பாரம்பரிய முறைப்படி விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த விருந்தில் தமிழ் கலாச்சார முறைப்படி தயாரிக்கப்பட்ட தக்காளி ரசம், கடலை குருமா, அரைச்சுவிட்ட சாம்பார், கவினரிசி அல்வா உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ளன.
மாமல்லபுரத்தில் நடைபெறும் பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். அவரை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றார். அங்கிருந்து அவர் கிண்டி சோழா ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு சீன அதிபரை வரவேற்கும் பொருட்டு, இந்தியாவில் வாழும் சீன மக்கள் பெரும்பாலானோர் ஹோட்டலின் முன் திரண்டுள்ளனர். அங்கிருந்து அவர் சாலைமார்க்கமாக மாமல்லபுரம் செல்ல உள்ளார்.
இந்தியா வந்தடைந்த சீன அதிபர் திரு. ஸீ ஜின்பிங்கிற்கு சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது https://t.co/uACpdy2dGB
— PIB in Tamil Nadu (@pibchennai) October 11, 2019
சீன அதிபர் ஜி ஜின்பிங், தனி விமானம் மூலம், சென்னை விமானநிலையம் வருகிறார். பின் கிண்டி நட்சத்திர ஹோட்டலில் தங்கும், அவர் மாலை 4 மணியனவில் சாலைமார்க்கமாக மாமல்லபுரம் செல்ல உள்ளார். இதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. ஒவ்வொரு 100 மீ தொலைவிற்கும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி . திருவிடந்தையில் பிரதமர் மோடியை அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் வரவேற்றனர் . திருவிடந்தையில் இருந்து பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக கோவளம் புறப்பட்டு சென்றார்.
மோடி - ஜின்பிங் சந்திப்பிற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழகம் வந்திருப்பதில் பெருமை கொள்வதாக, தமிழில் 2 டுவீட்களை செய்துள்ளார்.
சென்னை வந்திறங்கியுள்ளேன்.
— Narendra Modi (@narendramodi) https://twitter.com/narendramodi/status/1182536221408387073">October 11, 2019
கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். https://t.co/NxVUDlU86Y">pic.twitter.com/NxVUDlU86Y
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். https://t.co/d3nrL0kipn">pic.twitter.com/d3nrL0kipn
— Narendra Modi (@narendramodi) https://twitter.com/narendramodi/status/1182536250227490816">October 11, 2019
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடி தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருவிடந்தை பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார். அங்கிருந்து கோவளம் பகுதியில் அமைந்திருக்கும் தாஜ் பிஷர்மென்ஸ் கோவ் விடுதிக்கு செல்ல உள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு அளிக்க உள்ளார். பிரதமருடன் ஆளுநரும் திருவிடந்தை வந்துள்ளார்.
மோடிக்கு சிறப்பு வரவேற்பினை அளித்தனர் தமிழக தலைவர்கள். அதனை மோடி மாண்டரின் மொழியில் ட்வீட்டாக வெளியிட்டுள்ளார்.
在金奈降落。
我很高兴来到泰米尔纳德邦这片伟大的土地,泰米尔纳德邦以其伟大的文化和热情好客而闻名。
泰米尔纳德邦将接待习近平主席,这十分令人高兴。愿本次非正式会晤进一步加强印中关系。 pic.twitter.com/cS7t6jO3xJ
— Narendra Modi (@narendramodi) October 11, 2019
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டியில் முழக்கம் செய்த 5 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.டி.சி. கிராண்ட் சோலாவில் சீன அதிபர் தங்க இருக்கின்ற நிலையில் அந்த விடுதிக்கு எதிராக நின்று 5 திபெத்தியர்கள் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களில் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை அப்புறப்படுத்தியது காவல்துறை.
மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பிற்காக டெல்லியில் இருந்து தற்போது சென்னை வந்தடைந்துள்ளார் மோடி. அவரை பன்வாரிலால் ப்ரோகித் மற்றும் தமிழக முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் கோவளத்திற்கு தனி ஹெலிகாப்டர் மூலமாக செல்ல உள்ளார் மோடி.
சென்னையின் கிண்டியில் அமைந்திருக்கும் தனியார் 5 நட்சத்திர விடுதியில் சீன அதிபர் தங்க இருப்பதை ஒட்டி சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு நடத்தி வருகிறார். சென்னை விமான நிலையம் - கிண்டி இடையே உள்ள சாலையோர நடைபாதையில் சோதனைப் பணிகள் தீவிரம்
இருபெரும் தலைவர்களின் வருகையையொட்டி, மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மோடி – ஜி ஜின்பிங்கை வரவேற்று பனை ஓலையால் மாமல்லபுரத்தில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு சீன அதிபரை வரவேற்று தமிழ், இந்தி, மற்றும் சீன மொழியில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் சீன அதிபரை வரவேற்க காத்திருக்கும் மாமல்லபுரம்
ஐந்து ரதங்கள் அமைந்திருக்கும் பகுதியில் சீன அதிபரை வரவேற்க 17 வகையான பழங்களுடன் கூடிய வரவேற்பு வளைவு ஏற்பாடாகி வருகிறது.
Eighteen types of vegetables and fruits are used to erect gate at 'Panch Rathas' at Mamallapuram where Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping are expected to visit later in the day
Read @ANI Story |https://t.co/aZm1i8nWEB pic.twitter.com/QpzbLRQhNJ
— ANI Digital (@ani_digital) October 11, 2019
சீன அதிகாரிகள் அனைவரும் கிண்டியில் இருக்கும் நட்சத்திர விடுதியில் தங்க இருப்பதால் காவல்துறை பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 9 ஆயிரம் காவலர்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் காவலர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா வருகை புரியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இரண்டு நாள் திட்டங்கள் இவை தான். இன்று பகல் 02:10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். பின்பு அங்கிருந்து 4 மணி அளவில் மாமல்லபுரம் நோக்கி விரைகிறார்.
200 சீன அதிகாரிகள் சீன அதிபருடன் பயணிக்கின்றது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் 34 இடங்களில் 7 ஆயிரம் மாணவ மாணவிகள் சிறப்பு வரவேற்பினை அவருக்கு அளிக்கின்றனர்.
மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து மாமல்லபுரத்து புராதான சிறப்பம்சங்களை பார்வையிடுகிறார் ஜி ஜின்பிங். அர்ஜூனர் சிலை, ஐந்துரதங்கள் மற்றும் கடற்கரை கோவிலை இவ்விரு தலைவர்களும் இணைந்து பார்வையிடுகிறார்கள்.
விமான நிலையத்தில் இருந்து கத்திப்பாரா மற்றும் கத்திப்பாராவில் இருந்து சின்னமலை வரையிலான அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை,. ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் மற்றும் டேங்கர் லாரிகளுக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது.
சீன அதிபர் வருகையை ஒட்டி அவரை வரவேற்க செண்டை மேளங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் அக்கலைஞர்கள் தற்போது சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
Tamil Nadu: Chenda Melam (traditional orchestra of Kerala) performers arrive outside Chennai International Airport to welcome the President of China, Xi Jinping, ahead of his arrival today. pic.twitter.com/62elDCgDjk
— ANI (@ANI) October 11, 2019
நாளை காலை 10 மணி அளவில் மீண்டும் ஜி ஜின்பிங்கை சந்தித்து உரையாடுகிறார் மோடி. பின்னர் 11:45 மணி முதல் அவருடன் அமர்ந்து மதிய உணவு அருந்துகிறார். நாளை பகல் 1:40 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு புறப்படுகிறார் மோடி. 2 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார் மோடி. டெல்லி விமான நிலையத்திற்கு மாலை 04:50 மணிக்கு சென்றடைவார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என்னென்ன நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்... காலை 09:45 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் மோடி பகல் 12:30 மணிக்கு சென்னை வருகிறார். பின்பு அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக மாமல்லபுரம் செல்கிறார். பின்னர் 01:10க்கு மாமல்லபுரம் தாஜ் ஃபிஷர்மென்ஸ் கோவ் விடுதிக்கு செல்கிறார். பின்னர் மாலை 04:45க்கு விடுதியில் இருந்து வெளியேறும் அவர் 05 மணி முதல் 06 மணி வரை மாமல்லபுரத்தில் இருக்கும் புராதான சின்னங்களை பார்வையிடுகிறார். பின்னர் அடுத்த அரை மணி நேரம் அங்கு நடைபெற இருக்கும் கலைவிழாவை கண்டு களிக்கிறார். பின்னர் மாலை 06:45 மணி முதல் இரவு 8 மணி வரை சீன அதிபருடன் இரவு உணவு உட்கொள்கிறார். பின்னர் 08:45 மணி அளவில் மீண்டும் தன்னுடைய விடுதிக்கு திரும்புகிறார் மோடி.
தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே பண்டைய காலங்களில் இருந்து வர்த்தக போக்குவரத்து இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றான மாமல்லபுரத்திற்கு வருகை புரிய உள்ளார் சீன அதிபர். அவரை வரவேற்க இந்திய பிரதமர் மோடி மற்றும் உயர்மட்ட குழுக்கள் தயாரான நிலையில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights