/tamil-ie/media/media_files/uploads/2019/10/xi.jpg)
Zhou Enlai visited , actress padmini china president ,china president zhou Enlai admires Actress padmini , பத்மினி நடனம், சீனா அதிபர்
சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தருகிறார். இந்த பயணத்தை மிகவும் ஆரவாரத்தோடு கொண்டாட தமிழக அரசும், மத்திய அரசும் முடிவு செய்திருக்கிறது. சீனாவின் அதிபர் ஒருவர் தமிழகத்திற்கு வருவது இது முதல் முறையல்ல.
1956 - ம் ஆண்டு அப்போதைய சீன அதிபர் 'சூ என் லாய்' தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாமல்லபுரத் என்பது வரலாறு. 'சூ என் லாய்' மிகவும் எளிமையானவர். அவரின் தமிழக சுற்றுப்பயணத்தின் பல ஞாபகங்களைத் தமிழகம் இன்னும் மனதில் வைத்துக் கொண்டு தான் இருக்கின்றது.
உதாரணமாக, 1956 ம் ஆண்டு வந்த சீனா அதிபர் சென்னையிலுள்ள ஜெமினி ஸ்டூடியோவுக்கு சென்றிருக்கிறார். ஸ்டூடியோவைச் சுற்றிபார்த்தப் பின் , "இந்த ஸ்டூடியோ பணி மிகவும் கடிணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன், பல்வேறு கடமைப்புகளால் உருவாக்கப் பட்டுள்ளதாய் தெரிகிறது.... சீனர்கள் இங்கு வந்து விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்," என்று தெரிவித்திருக்கிறார்.
Image Source : தினத்தந்திமேலும், அப்போது ஜெமினி ஸ்டூடியோவில் இந்தி படத்தின் ஒருக்காட்சி சீனா அதிபரின் முன்னிலையில் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் , நடிகை பத்மினி நாட்டியம் ஆடியதாகவும், இதை கண்டுகளித்த சீனா அதிபர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிபடுத்தியதாகவும், தினத்தந்தி நாளிதில் அப்போது செய்தி ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us