சின்ன வெங்காயம் வைத்து ரூப்பரான காரக் குழம்பு. இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை
வெங்காய வடகம்
கட்டி பெருங்காயம்
2 வத்தல்
ஒரு கொத்து கருவேப்பிலை
7 பூண்டு இடித்தது
15 வெங்காயம்
உப்பு
2 தக்காளி அரைத்தது
சாம்பார் பொடி 2 டேபிள் ஸ்பூன்
முகால் டீஸ்பூன் மிளகாய் தூள்
கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
இரு சின்ன எலுமிச்சை அளவு புலி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில், வெங்காய வடகம், வத்தல், கட்டி பெருங்காயம் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து சின்ன வெங்காயம், கருவேப்பிலை, இடித்த பூண்டு சேர்த்து கிளரவும். வெங்காயம் நிறம் மாறியதும். அதில் தக்காளி அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.