scorecardresearch

ஆஸ்திரேலியாவில் இருந்து சோழர் கால அனுமன் சிலை மீட்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து சோழர் கால அனுமன் சிலை மீட்கப்பட்டது.

Chola-era bronze Hanuman idol recovered in Australia
சோழர் கால அனுமன் சிலையை படத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட பழங்கால அனுமன் சிலையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் தமிழ்நாடு சி.ஐ.டி. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழர் காலக் கோவிலில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட இந்த அரியவகை வெண்கலச் சிலை, 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமகனுக்கும் ஏலம் விடப்பட்டது.

இந்தச் சிலை செந்துறை அருகே பொட்டவெளி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு திருடப்பட்டது.
அப்போது, ஸ்ரீதேவி, பூதேவி வெண்கல சிலைகளும் திருடப்பட்டன. இந்த வழக்கு செந்துறை காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை என முடிக்கப்பட்டது. தொடர்ந்து, 2020 இல் சிலை பிரிவு-சிஐடிக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து, கூடுதல் காவல்துறை இயக்குநர் ஷைலேஷ் குமார் யாதவ் கூறுகையில், வெளிநாட்டு கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் பல்வேறு சிலைகளின் படங்களைக் காட்சிப்படுத்தியதாகவும், திருடப்பட்ட பழங்காலப் பொருட்களின் படங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்ததாகவும் கூறினார்.
அப்போது, ஆர்ட் ஏல நிறுவனமான கிறிஸ்டி நியூயார்க்கின் இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள ஹனுமான் சிலை உருவத்துடன் இது பொருந்தியது எனவும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chola era bronze hanuman idol recovered in australia