Advertisment

சென்னிமலை முருகன் கோயிலை ‘இயேசு’ மலையாக மாற்றுவோம் என சர்ச்சை பேச்சு; கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைது

ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ  முன்னணி அமைப்பின் நிர்வாகி ஜோசப் என்கிற சரவணனை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
Oct 19, 2023 18:31 IST
New Update
cff arrest chennimalai

கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைது

ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ  முன்னணி அமைப்பின் நிர்வாகி ஜோசப் என்கிற சரவணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு எனும் இடத்தில் ஜான் பீட்டர்  என்கிற அர்ஜுனன் என்பவர் நிலம் வாங்கி தேவாலயம் கட்டி மத போதனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.  ஜான் பீட்டர் கடந்த மாதம் 17-ம் தேதி தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் சேர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் அவரது மகன் கோகுல் ஆகியோர் ஜெபம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஜான் பீட்டர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜான் பீட்டர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேர்களைக் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து செப்டம்பர் 26-ம் தேதி சென்னிமலை பேருந்து நிலையம் பகுதியில் கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜோசப் என்கிற சரவணன், “கந்த சஷ்டி கவசம் அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலை (இயேசு மலை) என பெயர் மாற்றுவோம்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இதையடுத்து, இந்து முன்னணி சார்பில், சென்னிமலையை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் அக்டோபர் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, சென்னிமலை முருகன் கோயிலை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பு நிர்வாகி வழக்கறிஞர் ஜோசப் என்கிற சரவணன் மற்றும் மற்றும் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் ஆகிய 2 பேர் மீதும் மத கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் இருவரையும் தேடிவந்தனர்.

இந்த நிலையில், சென்னிமலை முருகன் கோயிலை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பு நிர்வாகி வழக்கறிஞர் ஜோசப் என்கிற சரவணனை போலீசார் செங்கல்பட்டில் கைது செய்தனர்.

இதனிடையே, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கோவில் திருப்பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தனர். கைது செய்யப்பட்ட, கைது செய்யப்பட்ட சரவணனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “சென்னி மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்ற விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி வழக்கறிஞர் சரவணனை போலீசார் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் நாளை மாலைக்குள் கைது செய்வார்கள்” என தெரிவித்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tirupur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment