கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே மடத்துவிளை பகுதியை சேர்தவர் சேவியர்குமார் (42). நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். இவர் திங்கள்நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றிவந்தார்.
இவரது மனைவி ஜெமீலா மைலோடு பகுதியில் உள்ள புனித மிக்கோல் அதிதூதர் தேவாலயத்திற்கு சொந்தமான மதர் தெரஸா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவரை பள்ளி நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்தது. இதையடுத்து சேவியர்குமார் வாட்ஸ்அப் குழுக்களில் ஆலய பங்குதந்தை மீது குற்றஞசாட்டியுள்ளார்.
இது குறித்து பேசுவதற்காக சேவியர் குமாரை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்திலுள்ள பங்குதந்தை இல்லத்திற்கு வருமாறு பங்கு தந்தை ராபின்சன் அழைத்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த சேவியர் குமாரிடம் பங்குதந்தை ராபின்சன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பங்குத் தந்தை ராபின்சன் மற்றும் தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு இவரது சகோதரர் சுரேஷ், ஜெஸ்டஸ் ரோக் உள்ளிட்டோர் தாக்கி கொலை செய்துள்ளனர்.
மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியினை டிவிஆர் பதிவு பெட்டியையும் எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஆலயத்தில் குவிந்ததுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை உடலை எடுக்க எடுக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“