உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி, இயேசுபிரான் அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தின் முக்கிய கிறிஸ்துவ தேவாலயங்களான சென்னை சாந்தோம், நாகப்பட்டினர் வேளாங்கண்ணி தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். வேளாங்கண்ணி மாதா கோயிலில், நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில், பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்கு காண்பித்தார். இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி உள்பட பிற மாவட்டங்களிலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்த சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிகா தேவாலயத்தில், போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். திருப்பலியில் பேசிய போப், மனிதர்கள் தன்னலம் பார்ப்பதை விட பிறர் நலம் பார்த்து சேவை புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் கல்வி மற்றும் தமிழ் மொழி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய கிறிஸ்தவர்களின் நலன் மற்றும் உரிமைகளை திமுக அரசு எப்போதும் பாதுகாத்து வருகிறது. “எங்கள் அரசாங்கம் தொடர்ந்து கிறிஸ்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்”. தொற்றுநோய் காரணமாக போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுமாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “