இயேசு கிறிஸ்து பிறந்து தினமான டிசம்பர் 25-ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை- திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நேற்று (டிச.10) மெழுகுவர்த்தி ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கேரல் குழுவினர் இயேசு கிறிஸ்துவின் புகழைப் பாடினர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு நிகழ்வாக 500 மெழுகுவர்த்திகளில் ஒளி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கேரல் இசை குழுவினர் இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் பாடல்களை பாடினர்.
முடிவில் கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பாடல் பாடினர். இந்த ஆராதனையில் சபையோர் திரளானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“