கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், குடும்பமாக வெளிநாடு, வெளிமாநிலங்கள் சுற்றுலாவிற்கும் செல்ல திட்டமிடுவர்.
அந்த வகையில் பயணிகள் விமான சேவைகள் அதிகம் பயன்படுத்தும் நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. 5 மடங்கு உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் போன்ற சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
விடுமுறை நாட்களில் விமானக் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால் முன்பதிவு செய்ய இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உள்நாட்டு விமான கட்டணங்கள்
சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் – ரூ. 4,796, இன்றைய கட்டணம் ரூ. 14,281.
சென்னை- மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,300, இப்போது ரூ. 17,695.
சென்னை- திருச்சி இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,382; இப்போது ரூ.14,387 ஆக அதிகரிப்பு.
சென்னை – மைசூரு இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.3,432; இன்றைய கட்டணம் ரூ.9,872ஆக அதிகரிப்பு.
சென்னை – கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,485; இன்றைய விமான கட்டணம் ரூ.9,418ஆக அதிகரிப்பு.
சென்னை – சேலம் வழக்கமான கட்டணம் ரூ. 3,537; இப்போது ரூ.8,007ஆக அதிகரிப்பு.
சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.3,821; இப்போது கட்டணம் ரூ.13,306ஆக அதிகரிப்பு.
சர்வதேச விமான கட்டணங்கள்
சென்னை – சிங்கப்பூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.7,510; இன்றைய கட்டணம் ரூ.16,861 ஆகும்.
சென்னை – கோலாலம்பூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.11,016; இப்போது ரூ.33,903ஆக அதிகரிப்பு.
சென்னை– தாய்லாந்து வழக்கமான கட்டணம் – ரூ.8,891, இன்றைக்கு கட்டணம் ரூ.17,437.
சென்னை- துபாய் வழக்கமான கட்டணம் ரூ.12,871, இப்போது கட்டணம் ரூ. 26,752 ஆக அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“