southern-railway | christmas | கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்கும் வகையில் நாகர்கோவில் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே ஒரு வழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
இது குறித்து தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ரயில் எண். 06046 நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 25ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு சென்னையை சென்றடையும்.
இந்த ரயிலில் இரண்டு ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள், ஐந்து ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், பத்து ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், இரண்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி (மாற்றுத்திறனாளிகள்) இருக்கும்.
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோன்று, எர்ணாகுளம் ஹாட்டியா இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்கப்படுகின்றன. இந்த ரயில், எர்ணாகுளத்தில் இருந்து டிசம்பர் 22, 29 மற்றும் ஜனவரி 5 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் ஹதியா இடையே பயணிக்கும்.
இது மூன்றாம் நாள் துவ்வாடாவையும், அதே நாளில் ஹதியாவையும் சென்றடையும். மேலும், டிசம்பர் 30 முதல் ஹவுரா-திருப்பதி-ஹவுரா ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (20889/20890) இல் மூன்றாவது ஏசி பெட்டி ஒன்று நிரந்தரமாக சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோழிக்கோடு சிறப்பு ரயில்
கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னையில் இருந்து கோழிக்கோடு வரை சிறப்பு ‘வந்தே பாரத்’ சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் (06041) டிச.25 காலை 4:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3:20 மணிக்கு கோழிக்கோடு சென்றடையும்.
ரயிலில் ஏசி நாற்காலி கார் டிக்கெட்டின் விலை ரூ.1,530 ஆக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“