குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸில் 30 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

Chrompet Saravana Stores closed for having 30 employees affected by Corona சுமார் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

Chrompet Saravana Stores closed for having 30 employees affected by Corona
Chrompet Saravana Stores closed for having 30 employees affected by Corona

Chrompet Saravana Stores closed for having 30 employees affected by Corona : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பணிபுரியும் 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

டெல்டா, ஒமிக்ரான் உள்ளிட்ட கொரோனா மாறுபாடுகளோடு ஃப்ளூ போன்ற நோய்களும் வேகமாகப் பரவி வருவதால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளும் மீண்டும் வழிமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், பணியிடங்களில் கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது.

ஊழியர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவேண்டும் உள்ளிட்ட கோட்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால், மாவட்ட நிர்வாகம் இந்தக் கடையை மூட உத்தரவிட்டது. இதன்பேரில் தற்போது குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chrompet saravana stores closed for having 30 employees affected by corona

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com