விமானம் தாமதமானால் கவலை வேண்டாம்; சென்னை விமான நிலையத்திற்கு வருகிறது 5 சினிமா தியேட்டர்கள்

சென்னை விமான நிலையத்தில் நீங்கள் செல்ல வேண்டிய விமானம் காலதாமதமாக வந்தாலோ அல்லது நீங்கள் விமான நிலையத்தில் விருந்தினரை வரவேற்க செல்லும்போது விமான தாமதமாக வந்தாலோ மணிக்கணக்கில் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் விமான நிலையத்திலேயே ஜாலியாக ஒரு சினிமா பார்த்துவிட்டு பொழுதைப் போக்கலாம்.

chennai airport, soon cinema theaters coming at chennai airport, சென்னை விமான நிலையம், சினிமா தியேட்டர், திரையரங்குகள், பிவிஆர் சினிமாஸ், pvr cinemas, Olympia group, cinema theaters, cinema theaters at chennai airport

சென்னை விமான நிலையத்தில் நீங்கள் செல்ல வேண்டிய விமானம் காலதாமதமாக வந்தாலோ அல்லது நீங்கள் விமான நிலையத்தில் விருந்தினரை வரவேற்க செல்லும்போது விமான தாமதமாக வந்தாலோ மணிக்கணக்கில் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் விமான நிலையத்திலேயே ஜாலியாக ஒரு சினிமா பார்த்துவிட்டு பொழுதைப் போக்கலாம்.

சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் சினிமாஸ் 5 திரையரங்குகளை கட்ட உள்ளன. சென்னை விமான நிலையத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் பல அடுக்கு கார் பார்க்கிங் கட்டடத்தில் பி.வி.ஆர் சினிமாஸ்ஸின் திரையரங்குகள் கட்டப்பட உள்ளன.

விமான நிலையத்தில், ஒலிம்பியா குரூப் சுமார் ரூ.250 கோடி செலவில் இந்த திரையரங்குகளை அமைக்கிறது. இந்த திரையரங்குகளில் ஹோட்டல்கள், குளிர்பானக் கடைகளும் அமைய உள்ளன. பிவிஆர் சினிமாஸ் ஒலிம்பியா குரூப்புடன் ஒப்பந்தம் செய்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த 5 திரையரங்குகளிலும் சுமார் 1000 அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் கட்டப்பட உள்ளன. சென்னை விமான நிலையத்தில் திரையரங்குகள் என்ற திட்டம் 2021-ம் ஆண்டு மத்தியில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், 2021-க்குப் பிறகு சென்னை விமான நிலையத்தில் உங்களுடைய விமானம் தாமதமாதமாக வந்தாலோ, உங்களுடைய விருந்தினர் வரும் விமானம் தாமதமாக வந்தாலோ மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டுமே என்று கவலைப்பட வேண்டாம். விமான நிலையத்தில் விரைவில் திரையரங்குகள் வர உள்ளது. காத்திருக்காமல ஜாலியாக சினிமா பாருங்கள்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cinema theaters coming soon at chennai airport

Next Story
43வது புத்தகத் திருவிழா : அடுத்த வருசம் இதெல்லாம் கொஞ்சம் மனசுல வச்சுக்கங்க பபாசி!Chennai Book Fair 2020
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com