சினிமா டு அரசியல்: டிசம்பரில் மரணம் அடைந்த முக்கிய தலைவர்கள்

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று டிசம்பர் மாதம் மரணம் அடைந்த முக்கிய தலைவர்கள் வரிசையில், நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று டிசம்பர் மாதம் மரணம் அடைந்த முக்கிய தலைவர்கள் வரிசையில், நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Vijayakanth MGR Jayalalitha

விஜயகாந்த் - எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று டிசம்பர் மாதம் மரணம் அடைந்த முக்கிய தலைவர்கள் வரிசையில், நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

Advertisment

தமிழ்நாடு கலாச்சாரத்தையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு சினிமா, தமிழ் பேசும் மக்களின் கலாச்சாரமாக மாறியிருக்கிறது. அதனால்தான், தங்களின் அரசியல் தலைவர்களை திரைத் துறையில் தேடும் தமிழ்நாடு மக்களின் ஆர்வம் தனியாமல் இருக்கிறது. சினிமா இன்றும் தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் செல்வாக்கு செலுத்தும் துறையாக உள்ளது. 

தமிழ்நாடு மக்களுக்கு ஒருவர் பிடித்துவிட்டால், அவரை முதலமைச்சர் நாற்காலி வரை உச்சத்திற்கு கொண்டு போய்விடுவார்கள். அந்த வகையில், ரிக்‌ஷாக்காரன், படகோட்டி என எளிய மக்களில் ஒருவராக வேடம் ஏற்று நடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்து பிரபலமான ஜெயலலிதா பின்னாளில், அவரும் முதலமைச்சர் ஆனார். தமிழக மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டு அரசியலில், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். தி.மு.க-வைத் தொடங்கியவரும் தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாவும் ஒரு வகையில், திரைத் துறையைச் சேர்ந்தவர்தான். அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகம் சினிமாவாக வந்தது. அதே போல, நல்லத்தம்பி படத்துக்கு திரைக்கதை எழுதினார். ஓர் இரவு படத்துக்கு கதை எழுதினார்.

Advertisment
Advertisements

அண்ணாவின் வழியில் வந்த கலைஞர் கருணாநிதியும் சினிமா துறையைச் சேர்ந்தவர்தான். அவர் கதை வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்தார். தமிழ்நாட்டில் நிண்டகாலம் ஆட்சி செய்த முதலமைச்சர் என்ற புகழைப் பெற்றார்.

ஒரு சினிமா நடிகராக தி.மு.க-வுடன் சேர்ந்து வளர்ந்த எம்.ஜி.ஆர், தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். தி.மு.க-வில் இருந்து பிரிந்து, அ.தி.மு.க-வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர் அவர் இறக்கும் வரை முதலமைச்சராகவே இருந்தார். அடுத்து, எம்.ஜி.ஆர் உடன் பல படங்களில் சேர்ந்து நடித்து, அவரால் அரசியலுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஜெயலலிதா முதலமைச்சரானார். அரசியலில் ஒரு இரும்பு பெண்மணியாகவும் தமிழக மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

இப்படி, தமிழ் சினிமாவிலும், தமிழக அரசியலிலும், சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று முதலமைச்சரான தலைவர்கள் இருந்தாலும், சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்து சோபிக்க முடியாமல் தோல்வி அடைந்தவர்களும் உண்டு.

தமிழ்நாடு மக்களால் நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சிவாஜி கணேசன் அரசியலில் வெற்றி  பெற முடியாமல் தோல்வியைத் தழுவினார். உலக நாயகன் என்று புகழப்படும் கமல்ஹாசன், அரசியலில் தனிக்கட்சி தொடங்கி வெற்றி பெற போராடி வருகிறார். 

ஆனால், விஜயகாந்த் சினிமா துறையில் வெற்றிகரமான நடிகராக சாதித்துக் காட்டினார். மக்கள் அவரை புரட்சி கலைஞர் என்றும் கேப்டன் என்றும் கொண்டாடினார்கள். நடிகர் சங்கத் தலைவராக சாதித்தார், அரசியலில் நுழைந்து தே.மு.தி.க என தனிக்கட்சி தொடங்கி தான் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். 2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தார். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார். தமிழக மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தலைவராக இருந்தார். ஆனால், அவர் உடல்நலக் குறைவு, அவர் இன்னும் அடைய வேண்டிய உயரத்தை தட்டிப் பறித்துக்கொண்டது. 

இப்படி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி வாகை சூடிய, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, வரிசையில் விஜயகாந்த்தும் இடம் பிடித்தார். தமிழக வரலாற்றில், சினிமா டு அரசியல் களம் கண்டு வெற்றி அடைந்த முக்கிய தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில், விஜயகாந்த் டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.  

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் டிசம்பர் 24, 1987-ம் ஆண்டு காலமானார். அதே போல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2016-ல் காலமானார். தற்போது, கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28, 2023-ல் மரணம் அடைந்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: