“நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க வேண்டாம்” – ஜெயக்குமாரை கடுமையாக சாடிய சித்தார்த்

நான் விளம்பரத்திற்காக எதையும் பேச வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையாக உழைத்து எனக்கான இடத்தை நான் அடைந்துள்ளேன்.

By: Updated: December 13, 2019, 08:06:42 PM

Citizen amendment bill twitter tussle between actor siddharth and TN minister Jayakumar : இன்று இந்தியா சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பல மட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நடிகர் சித்தார்த்தும் தன்னுடைய கருத்தினையும், அரசின் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் ஒரு போதும் சுட்டிக் காட்ட தவறியதே இல்லை.

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. இதனை அனைத்து தரப்பினரும் கடுமையாக சாடிய நிலையில் “முன்னாள் முதலவர் ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற சட்டத்திற்கு நிச்சயம் ஆதரவு அளித்திருக்க மாட்டார். அவர் இல்லாத தருணங்களில் அதிமுகவின் பண்புகள் அழிந்து போய்விட்டது” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் பிரதிநிதியாக இருப்பதை எண்ணி நான் மிகவும் வெட்கப்படுகிறேன். அதிமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அவருடைய உண்மையான நிறம், நேர்மையின்மை, அதிகாரத்தில் இருக்க எதையும் செய்யும் நிலை ஆகியவை வெளிப்படையாகிறது. உங்களின் தற்காலிக அதிகாரத்தை அனுபவியுங்கள் என்றும் ட்வீட் செய்திருந்தார்.

பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சித்தார்த்தின் ட்வீட் குறித்து அவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “யார் சித்தார்த்… எந்த படத்தில் நடத்திருக்கிறார்? விளம்பரத்திற்காக சில கேள்விகளை அவர்கள் முன்வைப்பார்கள். அவர்களை எல்லாம் பெரிய மனிதராக்க விரும்புவில்லை. அடுத்த கேள்வி கேளுங்க!” என்று ஜெயக்குமார் பதில் கூறினார்.

இதற்கு பதில் கூறும் வகையில் மீண்டும் ஒரு ட்வீட்டினை பதிவு செய்துள்ளார் சித்தார்த். அதில் ”அவர் என்னை யார் என்று கேட்டார். அதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் அவர்களுடைய ஆட்சியின் போது தான் 2014ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தமிழ் நாடு மாநில விருதினை வழங்கினார்கள். 2017ம் ஆண்டும் எனக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் கையில் வந்து சேரவில்லை. நான் விளம்பரத்திற்காக எதையும் பேச வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையாக உழைத்து எனக்கான இடத்தை நான் அடைந்துள்ளேன். என்னை நீங்கள் ஒன்றும் பெரிய ஆளாக்க வேண்டிய தேவை இல்லை. உங்களின் வேலையை மட்டும் பாருங்கள். அது மட்டும் போதும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Citizen amendment bill twitter tussle between actor siddarth and tn minister jayakumar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X