Transport Corporation Unions | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, போக்குவரத்து ஊழியர்கள், அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இன்று நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு மாத நிலுவை சம்பளம் வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் பேட்டியளித்தார்.
அப்போது, “கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 8 அரசாணைகள்தான் போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்து பிரச்னைக்கும் காரணம்” எனக் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக ஜனவரி மாதம் அளித்த பேட்டியில், “போக்குவரத்து தொழிலாளர்களை அரசு இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது; எங்களின் கோரிக்கை மீது எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறுகின்றனர்.
முத்தரப்பு பேச்சு வார்த்தையில் அரசின் பதிலில் திருப்தி ஏற்படவில்லை” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“