Advertisment

Coimbatore, Madurai, Trichy News Live: டங்ஸ்டன் திட்டம் ரத்து - பாராட்டு விழாவில் பங்கேற்கும் கிஷன் ரெட்டி

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kishan

மீனவர்கள் சிறப்பிடிப்பு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்த இலங்கை கடற்படை ரோந்து வந்த போது துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் காயம் அடைந்தனர். 

  • Jan 28, 2025 20:59 IST

    பாராட்டு விழாவில் பங்கேற்கும் கிஷன் ரெட்டி

    டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மதுரை மாவட்டம், அ.வல்லாளப்பட்டியில் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்கிறார்.



  • Jan 28, 2025 16:59 IST

    ரூ.50,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை

    நாகர்கோவிலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிடி கடையில் சோதனை நடத்தாமல் இருக்க ரூ.50,000 லஞ்சம் வாங்கிய வடசேரி காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ராஜசேகருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் சிலர் பிறழ்சாட்சியாக மாறினாலும், ரசாயன பவுடர் தடவிய பணத்தை ராஜசேகர் வாங்கியது உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் ராஜசேகர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது



  • Advertisment
  • Jan 28, 2025 16:31 IST

    வி.ஏ.ஓ கைது 

    அரியலூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்து தர ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வங்குடி கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். கூலித் தொழிலாளி வேல்முருகனிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கியபோது வி.ஏ.ஓ. புகழேந்தி கையும் களவுமாக சிக்கினார்.

     



  • Jan 28, 2025 16:30 IST

    நெல்லையில் கோயிலில் ஊழியர் மீது தாக்குதல்

    நெல்லை திருக்குறுங்குடி கோயிலில் பெண் ஊழியரை தாக்கிய விவகாரத்தில் நிர்வாகத் தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீயர் மட அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

     



  • Advertisment
    Advertisement
  • Jan 28, 2025 15:47 IST

    மாஞ்சோலை மக்களை சந்திக்கும் ஸ்டாலின் - நெல்லையில் 2 நாள் சுற்றுப்பயணம்

    நெல்லை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 6-ம் தேதி செல்கிறார். நெல்லையில் பிப்ரவரி 7 -ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் மாஞ்சோலை மக்களை சந்திக்க உள்ளார் 



  • Jan 28, 2025 15:03 IST

    தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார் சீமான்: திருமாவளவன்

    தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார் சீமான். இடைத்தேர்தலில் பா.ஜ.க ஆதரவாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக, இந்த உத்தியை கையாள்கிறாரா என தெரியவில்லை என்று, திருமாவளவன் எம்.பி.கூறியுள்ளார்.



  • Jan 28, 2025 14:08 IST

    திருப்பூரில் மேலும் 15 வங்கதேச இளைஞர்கள் கைது

    திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்து ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்த 15 வங்கதேச இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இந்த மாதத்தில் மட்டும் 98 வங்கதேசத்தவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல போலி ஆதார் அட்டை கொடுத்து இங்குள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



  • Jan 28, 2025 14:03 IST

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர முதல்வருக்கு மனமில்லை: அன்புமணி ராமதாஸ்

    வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தர முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் இனி எந்த கட்சியும் கூட்டணி தயவின்றி, தனியாக ஆட்சிக்கு வர முடியாது" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.



  • Jan 28, 2025 13:31 IST

    அருகருகே அமர்ந்தும் பேசாமல் இருந்த   ராமதாஸ் - அன்புமணி

    சேலத்தில் இன்று நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அருகருகே  அமர்ந்தும் ராமதாஸ் - அன்புமணி பேசிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தனர்.கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது



  • Jan 28, 2025 12:48 IST

    "திராவிட மாடல் ஆட்சி என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்வேன்" -விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட கருத்தியல். இதனால் தான் 'ஸ்டாலின் ஆட்சி' என்று தற்பெருமை தேடாமல் 'திராவிட மாடல் ஆட்சி' என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன் என்று விழுப்புரத்தில் உரையாடியபோது முதலமைச்சர் கூறியுள்ளார். 



  • Jan 28, 2025 12:13 IST

    செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் புதிய தொழிற்பயிற்சி கூடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறவிப்பு

    செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் புதிய தொழிற்பயிற்சி கூடம் பற்றி அறிவித்துள்ளார் முலமைச்சர் மு.க. ஸ்டாலின். தென்னமாதேவி அருகே அகழ்வாராய்ச்சி பணிகள் தொடரும், என்னுடைய ஆய்வின் போது அதிக அறிவிப்புகளை பெட்ரா மாவட்டம் விழுப்புரம் தான் என்றும் கூறியுள்ளார். 



  • Jan 28, 2025 12:10 IST

    திருச்சி: ஸ்ரீரங்கத்தில் ரவுடி வெட்டிக்கொலை

    திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் அருகே ரவுடி அன்பரசன் (32) சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு அன்பரசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வைகுண்ட ஏகாதேசி பாரிவேட்டை விழா தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கக்கூடும் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 



  • Jan 28, 2025 11:52 IST

    திருவாரூரில் சாதி சான்றிதழ் வழங்க கோரி போராட்டம்

    திருவாரூரில் சாதி சான்றிதழ் வலியுறுத்தி ஆதியான பழங்குடியின மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீவாஞ்சியம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளோரும் போராட்டத்தில் கலந்துள்ளனர்.



  • Jan 28, 2025 11:31 IST

    வாக்குச்சாவடி வாரியாக தவெக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவு

    தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக தவெக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தலா 5 முதல் 7 பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு நிர்வாகியை நியமிக்க தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.  



  • Jan 28, 2025 11:28 IST

    அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

    ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இல்லாததை  கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம். 



  • Jan 28, 2025 11:18 IST

    நாதகவில் இருந்து மேலும் 500 பேர் விலகல்

    நாதக மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணை தலைவர் ரகு உள்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜால்ரா போடும் நபர்களுக்கும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் நாம் தமிழர் கட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படுவதாக ரகு தெரிவித்துள்ளார். 



  • Jan 28, 2025 10:48 IST

    ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறப்பு விழா

    விழுப்புரத்தில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஏ.கோவிந்தசாமி முன்னாள் அமைச்சர் நினைவு அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.



  • Jan 28, 2025 10:44 IST

    குவாரியில் கூடுதல் கற்கள் வெட்டி எடுத்து முறைகேடு

    திருமயம் குவாரியில் அனுமதிக்கப்பட்டதை விட 6 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் கூடுதலாக வெட்டி எடுப்பு கனிமவளத்துறை அதிகாரிகளின் சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.



  • Jan 28, 2025 10:43 IST

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் மூலவர் சிலை வீடியோ வெளியிட்ட நபர் மீது வழக்கு

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் மூலவர் சிலையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. துணை நடிகரான செல்வா, தடையை மீறி செல்போனில் வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.



  • Jan 28, 2025 10:42 IST

    இந்திய கடற்படையை தொடர்புகொள்ள முடியவில்லை

    நமது எல்லப்பகுதிக்கு வந்து இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு சுற்றிவளைத்ததும் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்க முயன்றபோது தொடர்புகொள்ள முடியாமல் போனதாக தப்பி வந்த மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.



  • Jan 28, 2025 10:40 IST

    சாதி சான்றிதழ் கேட்டு ஆதியன் பழங்குடியின மாணவர்கள் போராட்டம்!

    திருவாரூரில் ஆப்பரகுடி, ஸ்ரீவாஞ்சியம்,கச்சனம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, விளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாதி சான்றிதழ் கேட்டு ஆதியன் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதிகளில் உள்ள ஆதியன் பழங்குடியின மாணவர்கள் 2 ஆவது நாளாக பள்ளிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Jan 28, 2025 10:05 IST

    காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு

    இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 13 பேரின் குடும்பத்தினர் தலையில் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Jan 28, 2025 10:00 IST

    விழுப்புரத்தில் ஸ்டாலின் கள ஆய்வு

    விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற முதல்வர் ஸ்டாலின். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் `ரோடு ஷோ'



  • Jan 28, 2025 09:13 IST

    இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர்.



  • Jan 28, 2025 09:12 IST

    அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து - 5க்கும் மேற்பட்டோர் காயம்

    சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார், 2 தனியார் தொழிற்சாலை பேருந்துகள் காலி மாதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி என அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.



  • Jan 28, 2025 09:10 IST

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

    திருவாரூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சதாசிவம் என்ற முதியவருக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 19,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



  • Jan 28, 2025 09:08 IST

    சீர்காழியில் என்.ஐ.ஏ. சோதனை

    மயிலாடுதுறை அடுத்துள்ள சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. திருமுல்லைவாசல் கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கின்றார்களா என்பது குறித்தும் விசாரணை தொடர்கிறது.



news updates tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment