ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்ற வீடியோ வெளியாகி உள்ளது.வாக்குவாதத்தின் போது ராமநாதபுரம் ஆட்சியரை தள்ளிவிட்ட எம்.பி.நவாஸ் கனியின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு சார்பில் ராமநாதபுரத்தில், தனியார் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு அவர் வருவதற்கு முன்பே, அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நவாஸ்கனி, அமைச்சரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளியில், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றுள்ளது. விழாவின் நேரம் 3 மணி என்று அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் எம்.பி நவாஸ் கனி, 2.55 மணிக்கு வந்தபோது, ஏற்கனவே நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் 2.30 மணிக்கு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நவாஸ் கனி, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வாக்குவாதத்தின் போது ராமநாதபுரம் ஆட்சியரை தள்ளிவிட்ட எம்.பி.நவாஸ் கனியின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விஜயராமு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“