சென்னையில் தெலங்கானா மாணவர்கள் – மாநகர பேருந்து ஓட்டுநர்கள் இடையே கடும் மோதல்

மற்ற பேருந்து ஓட்டுநர்கள் வரிசையாக பேருந்தை நிறுத்தி நடத்தருக்கு ஆதரவாக சாலையில் இறங்கி‌ தெலங்கானா மாநில மாணவர்களை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

By: September 2, 2019, 6:14:42 PM

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரியார் நகர் வரை சென்ற 29 ஏ, மாநகர பேருந்தில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பயணம் செய்தனர். அப்போது, பேருந்து நடத்துனர் வில்சனுக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான லட்சுமணனுக்கும் டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இது கடும் வாக்குவாதம் எழ, ஒருக்கட்டத்தில் கைகலப்பாக உருமாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பேருந்து எழும்பூரில் நின்றதும் தெலங்கானா விளையாட்டு வீரர்களுக்கும், நடத்துனருக்கும் இடையே கைகலப்பு நிகழ்ந்தது. இது குறித்து தகவல் கிடைத்த மற்ற பேருந்து ஓட்டுநர்கள் வரிசையாக பேருந்தை நிறுத்தி நடத்தருக்கு ஆதரவாக சாலையில் இறங்கி‌ தெலங்கானா மாநில மாணவர்களை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடத்துனரை தெலங்கானா மாணவர்கள் தாக்கியதாக தகவல் பரவ, அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலரும் அம்மாணவர்களை தாக்கினர்.


இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 5 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த மோதல் காரணமாக எழும்பூர் பேருந்து நிறுத்தம் அருகே கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Clash between telangana students and chennai city bus drivers conductors

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X