பொன்னேரி சோகம்: பள்ளி கழிவறைக்குள் சென்ற 8-ம் வகுப்பு மாணவன் மரணம்; உறவினர்கள் போராட்டம்

பள்ளியில் தவறி விழுந்த மாணவனை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian express
(Representational Image)

வெள்ளிக்கிழமை, பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளிக் கழிவறைக்குள் 8ஆம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை எஸ்.பிரதீஸ்வரன் (உயிரிழந்த மாணவன்) பள்ளிக் கட்டிடத்தில் உள்ள கழிவறைக்குள் தவறி விழுந்தார். அப்போது அங்கிருந்த மற்ற மாணவர்கள் அவரை வெளியே அழைத்து வந்தனர்.

பள்ளி ஊழியர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொன்னேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுவன் கழிவறைக்குள் செல்வதையும், சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்டதையும் காணக்கூடிய சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இதைப்பற்றி மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Class eight boy slips inside school toilet dies ponneri

Exit mobile version