தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், பாம்பனில் மேகவெடிப்பு காரணமாக 3 மணி நேரத்தில் 19 செமீ மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்படி பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அதே போல, ராமேஸ்வரத்தில் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 10 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்றும் புதன்கிழமை (நவம்பர் 20) மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மொத்தம் 4 மணிநேரத்தில் ராமேஸ்வரத்தில் மட்டும் 36 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம், மண்டபம் கேம்ப், மரைக்காயர் பட்டினம், வேதாளை, சீனியப்ப தர்கா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், இப்பதிகளில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“