லாக்டவுனில் மதுபான விற்பனைக்கு அனுமதி.. பிரபல கிளப்கள் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

பீர், ஒயின் மதுபானங்களை அதிகளவில் வாங்கி வைத்திருக்கின்றனர்.

By: Updated: July 16, 2020, 11:17:14 AM

clubs withdraw cases : சென்னையில் செயல்படும் 2 முக்கிய கிளப்கள் ஊரடங்கில் மதுபான விற்பனைக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிற்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்கள் விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திநகரின் செயல்படும் 2 முக்கிய கிளப்கள், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை தங்களது கிளப் உறுப்பினர்களுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுப்போன்ற வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.

வாங்கி வைத்துள்ள மதுபான பாட்டில்கள் காலாவதி ஆகிவிடும் என்ற காரணத்திற்காக கிளப் உறுப்பினர்களுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்க இயலாது எனவும் நீதிபதி கருத்து கூறினார்.இந்நிலையில், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கிளப் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுக்குறித்து திநகர் கிளப் உரிமையாளர் பி.எஸ் அசோக் கூறுகையில், “ தி.நகர் சமூக கிளப் சென்னையில் இருக்கும் பழமையான கிளப்களில் ஒன்று. கிளப் இயங்குவதற்கான முறையான லைசன்ஸ் பெற்று இயங்கி வருகிறது. அவ்வப்போது, ​பீர், ஒயின் உள்ளிட்ட பெரிய அளவிலான மதுபானங்களை வாங்குவதோடு, அவற்றை கிடங்கில் சேமித்து வைத்துள்ளோம். இவை கிளப் உறுப்பினர்கள் பங்களித்த பொதுவான நிதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

மேலும், கிளப்பில் 80 நிரந்தர ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் சம்பளம் மட்டுமே மாதத்திற்கு 8 லட்சம் வரை ஆகிறது. இது தவிர, பொதுவான நிதிகளிலிருந்து தொடர்ச்சியான பிற செலவுகளும் உள்ளது. இதை கருத்தில்கொண்டு தான் மதுபானங்களை வீணடிக்காமல் உறுப்பினர்களுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதி கேட்டிருந்தோம். தேங்கி இருக்கும் மதுபானங்களால் கிளப் மிகப் பெரிய இழப்பை சந்தித்திருக்கிறது” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Clubs withdraw cases seeking permission to sell their liquor

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X