ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியுமா என்பதே சந்தேகம்: முதல்வர் பழனிச்சாமி
உச்ச நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினால் தேர்தலில் முடியுமா என்பதே சந்தேகம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினால் தேர்தலில் முடியுமா என்பதே சந்தேகம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
Advertisment
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி நலத்திட்ட பணிகளையும் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
விருதுநகரில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, “எங்களுடைய ஆட்சியில் நாங்கள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், திமுக முன்னாள் அமைச்சர் மீதும் பல அமைச்சர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் கூட அடுத்த தேர்தலில் நிற்க முடியுமா என்று கேள்வி எழுந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அவருடைய தேர்தல் வழக்கு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது எப்படி முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. ஆக முடிவு வேறுவிதமாக இருந்தால் அவர் 6 வருடத்திற்கு தேர்தலில் நிற்க முடியாது. அவருடைய கனவு பலிக்காது. நல்ல எண்ணம் படைத்தால் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தீய எண்ணம் கொண்டாள் ஆண்டவன் பார்த்துக் கொள்வான்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்று நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்துவிடுமோ என்று பெற்றோர்கள் கருதுகிறார்கள். பெற்றோர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயம், உண்மையான விவசாயம் பற்றி தெரியும். எனக்கு விவசாயம் தெரியும். ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயிகள் குறித்து விவசாயியான என்னிடம் கேட்டால் தெரியும்.” என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"