முதல்வருக்கு கண் அறுவை சிகிச்சை : 2 நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் உடல் நலத்துடன் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்துக்கு திரும்பினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் உடல் நலத்துடன் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்துக்கு திரும்பினார்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலது கண்ணில் புரையால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த சில தினங்களாக வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு கண் மருத்துவமனை இயக்குனர் மேற்பார்வையில் பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை தி.நகரில் உள்ள மருத்துவமனையில் கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆபரே‌ஷனுக்கு பிறகு அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்துக்கும் திரும்பினார்.

அடுத்த இரு நாட்கள் அவர் வீட்டில் தங்கி ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக அவர் அடுத்த சில நாட்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார் என அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

 

×Close
×Close