தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திடீரென ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று திடீரென சென்னை கிண்டியில் உள்ள அளுநர் மாளிக்கைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி முன்னதாகவே நேரம் ஒதுக்கப்பட்டு நடைபெற்றது என்றாலும் இது ஒரு திடீர் சந்திப்பாகவே நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாக வில்லை. எனினும், விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதன் மூலம் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் அதிகரித்துள்ளது. அதனால், முதலமைச்சர் பழனிசாமி தனது அமைச்சரவையை விரிவாக்க உள்ளதாகவும் அது சம்பந்தமாக முதல்வர் பழனிசாமி - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் மாதம் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அதன் பிறகு, இன்று ஆளுநரை சந்தித்துள்ளார்.