தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் பழனிசாமி பதில்

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் கட்டத்தில் இருந்து 3-ம் கட்டத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால், மருத்துவக் குழுவினர் அறிக்கை அளித்த பிறகே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2,10,538 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 92,814 பேர் வீட்டுக்கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அதில், 32,075 பேருக்கு 28 நாள் வீட்டுக்கு கண்காணிப்பு […]

cm edappadi k palaniswami announced lock down extended, tamil nadu lock down extended until april 30, corona virus crisis, covid-19,கொரோனா வைரஸ், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, முதல்வர் பழனிசாமி அறிவிப்பு, cm palaniswami annouced lock down extended in tamil nadu, latest corona viru news, latest tamil nadu coronavirus news, tamil latest coronavirus news, tamil nadu curfew extended, curfew extended in tamil nadu

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் கட்டத்தில் இருந்து 3-ம் கட்டத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால், மருத்துவக் குழுவினர் அறிக்கை அளித்த பிறகே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2,10,538 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 92,814 பேர் வீட்டுக்கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அதில், 32,075 பேருக்கு 28 நாள் வீட்டுக்கு கண்காணிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்றை பரிசோதனை செய்வதற்காக அரசு ஆய்வகங்கள் 12, தனியார் ஆய்வகங்கள் 7 ஏற்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய தேதிவரை ஆய்வகத்தில் பரிசோதனைக்கு 6,095 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 பேர். இன்னும் பரிசோதனை முடிவு வரவேண்டிய நபர்களின் எண்ணிக்கை 344 பேர். கொரோனா வைரஸ் நோய் என சந்தேகிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக 1953 பேர் உள்ளனர். கொரோனா நோய் கண்டறியப்பட்டவர்களில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து 21 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 3,320 வெண்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளது. கொரொனா சிகிச்சை தனிப்பிரிவில் 22, 449 படுக்கைகள் இருக்கின்றன. தனியார் சார்பாக 10,322 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 32,371 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரொனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசிடம் முகக்கவசம், என்95 முகக்கவசம் ஐஇ திரவங்கள், ஆண்டி பயாட்டிங் மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. 2500 வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரித ஆய்வு உபகரணங்கள் 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வந்துவிடும். 20 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் மத்திய அரசிடம் இருந்து கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். அதுவும் நாளைக்குள் வந்து சேர்ந்துவிடும். பிசிஆர் டெஸ்ட் 1.30 லட்சம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவரை மீறிய 1,17,796 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,27,792 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தடை உத்தரவை மீறி சென்றவர்களின் 99,797 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டவுடன் அவர்களிடம் இருந்து 40,9944 அபராதாம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். எல்லா குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அந்த வகையில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,01,46943, ஆகும். இவற்றில் 2,01,46991 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதற்கு ரூ.2014.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு ரூ.1000 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1.93,82,420 வழங்கப்பட்டுள்ளது. 96.03 % சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

95,01932 குடுமப் அட்டைகள் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழில் நிவாரணம் பெறுபவர்கள் விவரம் 12,13852 பேர் தகுதியானவர்கள். இதற்கு ரூ.121.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,46,812 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் அனைவருக்கு இரண்டு நாட்களில் வழங்கப்பட்டுவிடும்.

வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் 64,274 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ரூ.6.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 19,464 பேருக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் நிவாரணம் பெறுபவர்களின் எண்ணிக்கை 83,500 பேர். அவர்களுக்கு ரூ.8.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களில்
26,222 பேர் அத்தியாவசியப் பொருட்களை வாங்கியிருகிறார்கள்.

வெளி மாநிலத் தொழிலாலர்கள் மொத்த எண்ணிக்கை 1,75,085, கட்டடத் தொழிலாளர்கள், 1,12,774, பிற வணிக நிறுவனங்களில் 20,794 பேர் பணி புரிகிறார்கள். கரும்பு வெட்டும் பணியில் 3,700 பேர் மொத்த வெளி மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை, 3,07,456 பேர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறார்கள்.

நம்முடைய மாநிலத்தில் இருந்து வெளி மாநிலத்துக்கு சென்றவர்கள் 7,376 பேர் பணி செய்ய சென்றிருக்கிறார்கள்.

அரசு காய்கறி விற்பனை ஆங்காங்கே மார்க்கெட்களில் மக்கள் அதிகம் கூடுகிறார்கள். மக்கள் சமூக விலகலை பின்பற்றாததால், காய்கறிகளை அவரவர் பகுதிகளுக்கே கொண்டு சென்று அரசே நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்களைத் தொடங்கியிருக்கிறது. அதன் மூலமாக நேற்று (08.04.2020) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் வேளாண்மைத்துறையின் முலம் சுமார் 2000 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. உழவர் சந்தை மூலமாக மட்டும் 1700 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இன்றைக்கு 66 உழவர் உற்பத்தியாளர்கள் குழுவின் மூலமாக இவையெல்லாம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை, தனியார் மருத்துவக் கல்லூரி உட்பட 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது” என்று கூறினார்.

முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. கரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, நோயின் தாக்கத்தைப் பொறுத்தே தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று 2வது கட்டத்தில் இருந்தாலும் அபாயகரமான 3வது கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் 3வது கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால், அரசின் அனைவரும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதனால், கொரோனா நிலவரம் குறித்து மருத்துவக் குழு அறிக்கை அளித்த பிறகே ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழக அரசின் 12 நலவாரியங்களில் உள்ள 8.2 லட்சம் பேருக்கு தலா ரூ.1,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித்தொகை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். பணியின்போது காவல்துறை ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். சென்னை, மயிலாப்பூரில் பணியின்போது உயிரிழந்த அருண்காந்தி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

யாராவது கொரோனா அறிகுறிகள் இருப்பதை மறைத்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே தமிழக அரசு 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த் பரிசீலைனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் பொதுத் தேர்வு நடத்தப்படும். அது குறித்து பரிசீலனை நடத்தப்பட்டு வருகிறது.” என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm edappadi k palaniswami press meet on coronavirus action lock down

Next Story
விவசாயிகளிடம் நேரடி கொள்முதல்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவுgovernment should buy directly faremers products, விவசாயிகள் விளைபொருட்கள், நேரடி கொள்முதல், சென்னை உயர் நீதிமன்றம், tamil nadu farmers, chennai high court order, chennai high court news, tamil nadu latest news, latest tamil news,lock down tamil nadu, lock down india
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express