‘ஓயாத வாரிசு அரசியல் சர்ச்சை!’ – உதயநிதிக்கு கார் கதவை திறக்க நேரு!? – முதல்வர் தாக்கு

திமு கழகத்தின் மிக மூத்த தலைவர்கள் கூட, தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக திமுக வாரிசுகள் மத்தியில் தாழ்ந்து பணிச் செய்து வருவதாக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளால் அனல் பறந்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் பல மாற்றங்களை விளைவித்த வாரிசு அரசியல் குறித்த விவாதங்கள் மீண்டும் கிளம்பியுள்ளது. பத்தாண்டு காலமாக ஆளுங்கட்சியாக இருந்து வரும் அதிமுக, திராவிட முன்னேற்றக் கழகத்தை கார்ப்பரேட் கம்பெனி என கடுமையாக சாடியுள்ளதோடு, குடும்ப உறுப்பினர்களை மட்டுமே உயர்பதவிக்கு அமர்த்தும் திமுக அரசியல் கட்சியே அல்ல எனவும் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தான் உள்பட அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சாதாரண குடும்பங்களை சார்ந்தவர்கள் என்றும், உழைப்பால் முன்னேறி கட்சியிலும் அரசாங்கத்திலும் பதவியை பெற்றுள்ளோம். அதிமுக மட்டுமே ஜனநாயக ரீதியிலான கட்சி. அதிமுக வில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கூட எம்.எல்.ஏ, அமைச்சர், முதலமைச்சர் என பதவியை பெற முடியும்.

 ஆனால், திமு கழகத்தின் மிக மூத்த தலைவர்கள் கூட, தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக திமுக வாரிசுகள் மத்தியில் தாழ்ந்து பணிச் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். முன்னர், வாரிசு அரசியலின் படிநிலை, கருணாநிதி – ஸ்டாலின் என்று இருந்தது. அது தற்போது, ஸ்டாலின் – உதயநிதி என மாற்றம் கண்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகன் உதயநிதி உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசியலில் ஈடுபடமாட்டார்கள் என கூறியதையும், உதயநிதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தான் என்றும் அரசியலில் இருந்து விலகியே நிற்பேன் என கூறியதையும் மக்களிடம் நினைவுக் கூர்ந்தார். தற்போது, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக நியமித்திருப்பது, ஸ்டாலின் தனது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கிக் கொண்டதை காட்டுவதாக பழனிச்சாமி குறிப்பிட்டார்.

மேலும்,தொடர்ந்த அவர் ,திமுக தலைவர்களான கே.என்.நேரு, பெரியசாமி, துரைமுருகன் ஆகியோர் இருக்க, உதயநிதி அவர்களை மிஞ்சி எவ்வாறு  தேர்தலில் அதிகாரம் பெற்றார் என்ற ஆச்சரியத்தில்  தான் இருப்பதாகவும்,  உதயநிதியின் கார் கதவை நேரு குனிந்து திறந்துவிடும்  பரிதாப நிலையை பாருங்கள் என்றதோடு, வம்ச அரசியலில் ஈடுபட்டு வரும் திமு கழகத்திற்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

முதலமைச்சரின்  இந்த கூற்றை மறுத்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ‘உதயநிதிக்கு நேரடியாக எம்.எல்.ஏ பதவியை வழங்கவில்லை. திமுக சார்பில் அவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி  சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற, மக்களைச் சந்தித்து வாக்குகளைப் சேகரிக்க வேண்டும்’ என்றார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm edappadi k palaniswami slams dmk for succession politics

Next Story
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா; மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் தீவிரம்Tamil Nadu Covid19 vaccination daily Report Chennais caseload crosses 10,000
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com