விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு! முதல்வர் பழனிசாமி உரை

கொரோனாவை தடுக்க விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... என்று முதல்வர் பழனிசாமி, தமிழக மக்களிடையே ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

By: Mar 26, 2020, 11:20:53 AM

CM Edappadi K Palaniswami Speech on coronavirus: கொரோனாவை தடுக்க விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு… என்று முதல்வர் பழனிசாமி, தமிழக மக்களிடையே ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக முதல்வர் பழனிசாமி மார்ச் 16 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டார். இதையடுத்து பிரதமர் மோடி அறிவித்தபடி, மார்ச் 22-ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை மூட அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார்.

இதனைத் தொடந்து, இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களிடையே இரவு பேசுகிறார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மதுரையைச் சேர்ந்த 54 வயதான நபர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”
Live Blog
CM Edappadi K Palaniswami Speech Today updates: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக மக்களிடம் பேசுகிறார்.
23:59 (IST)25 Mar 2020
கொரோனாவை தடுக்க விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

முதல்வர் பழனிசாமி: பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். கடும் சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். சர்க்கரை, உயர் அழுத்தம் இருப்போர் தவறாமல் மருந்துகளை எடுக்க வேண்டும். கரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும், தமிழக மக்களையும் பாதுகாப்போம். விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு" என்றார்.

23:57 (IST)25 Mar 2020
சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து கரோனாவை விரட்ட உறுதியேற்போம் - முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து கரோனாவை விரட்ட உறுதியேற்போம். தமிழக முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராகப் பேசுகிறேன். 21 நாட்கள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. உங்களது குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பொறுப்பான குடிமக்களாக இருந்து சமுதாயத்தைப் பாதுகாப்போம்.

19:50 (IST)25 Mar 2020
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தமிழக அரசுக்கு முக்கியம் - முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாதபோது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ அல்லது பக்கத்து வீட்டினரோ உள்ளாட்சி அமைப்புக்கோ, சுகாதார துறைக்கோ அல்லது காவல்துறைக்கோ தகவல் தெரிவிக்கலாம். தனிமைப்படுத்தல் என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சமுதாயத்தையும் பாதுகாக்கத்தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அப்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தமிழக அரசுக்கு முக்கியம்.

19:46 (IST)25 Mar 2020
அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவை - முதல்வர்

முதல்வர் பழனிசாமி: அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவை. இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களாகவே முன்வந்து தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

19:45 (IST)25 Mar 2020
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு கூடுதலாக 2 நாள் ஊதியம் - முதல்வர்

முதல்வர் பழனிசாமி: அம்மா உணவகத்தின் மூலம் சூடான சுகாதாரமான சுவையான உணவு தொடர்ந்து வழங்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் பணிபுரிந்தவர்களுக்கு 2 நாட்களுக்கான ஊதியம் சிறப்பு கூடுதல் நிதியாக வழங்கப்படும்.

19:44 (IST)25 Mar 2020
நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 ரேஷன் பொருட்கள் நிவாரணம் - முதல்வர்

முதல்வர் பழனிசாமி: கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நலத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோத் தொழிலாளர் குடும்பத்திற்கு சிறப்புத் தொகுப்பாக ரூ.1000, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ சமையல் எண்ணெய், பருப்பு ஆகியவை வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 மற்றும் கூடுதலாக 1000 ரூபாய் நிவாரனத்தொகையாக வழங்கப்படும்.

19:34 (IST)25 Mar 2020
முதல்வராக இல்லாமல் உங்களில் ஒருவனாக பேசுகிறேன் - முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: அன்பான சகோதார சகோதரிகளே இச்சமயத்தில் நான் தமிழக முதல்வராக இல்லாமல் உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தில் ஒருவானாக பேசுகிறேன். உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி காட்டுத் தீ போல பரவி வருவதை நாம் எல்லோரும் அறிவோம். மத்திய அரசின் வேண்டுகோளின்படி, 21 நாட்கள் நாம் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். இந்த வைரஸ் நோய் எப்படி பரவுகிறது. நாம் ஒவ்வொருவரும் அதை தடுப்பதற்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

19:34 (IST)25 Mar 2020
மருத்துவமனைகளில் தயார் நிலையில் 10,158 படுக்கைகள் - முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றோருவருக்கு நேரடியாகவும் கைகளின் மூலமும் பரவுகிறது. தமிழக அரசு இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.3,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,158 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன. மேலும் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கருதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். அத்துடன் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, சர்க்கரை சமையல் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்படும்.

19:06 (IST)25 Mar 2020
தமிழக முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன் - முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: உடல் நிலை சரியில்லாவிட்டால் மக்கள் சுய மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டாம். பொறுப்புள்ள குடிமக்களாக இருந்து நம்மையும் சமூகத்தையும் காப்போம்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு ரூ.3,850 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அரிசி, பால், மருந்துப் பொருட்கள் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு.

19:04 (IST)25 Mar 2020
அத்தியாவசியப்ப் பொருட்களுக்காக யாரும் வெளியே வர வேண்டாம் வீடுகளிலேயே கிடைக்கும் முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: கொரோனாவுக்கு எதிராக அரசு போர்க்கால அடிப்படையில் நடவாடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கொரோனாவுக்கு எதிராகப் போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற உறுதியேற்போம்.

CM Edappadi K Palaniswami Speech Today updates: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக மக்களிடம் பேசுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஊரடங்கு உத்தரவுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார்.

Web Title:Cm edappadi k palaniswami speech on coronavirus today live cm edappadi k palaniswami speech today in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X