செப். 7 முதல் பஸ்கள், ரயில்கள் இயக்கம்; பொது இடைவெளி அவசியம்: முதல்வர் வேண்டுகோள்!

அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை, கட்டாயம் பின்பற்றினால், தொற்று பரவாமல் தடுக்க முடியும்

cm edappadi k palaniswami statement b
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

வரும் 7 ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பஸ் சேவையையும், பயணியர் ரயில் சேவையையும் துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி, செப்.,7 முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவை போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன் கருதி, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும்.வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.வெளியிடங்களில், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை, கட்டாயம் பின்பற்றினால், தொற்று பரவாமல் தடுக்க முடியும்.எனவே, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்

தமிழகத்தில், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 1ம் தேதி பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி, செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் முழுமையாக பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி செப்டம்பர் 2ம் தேதி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது
ஒரு சில கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி (Standard Operating Procedure) செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தற்போது செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும் எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள், ரயில்கள் முழுமையாக இயக்கப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm edappadi k palaniswami statement buses trains will fully operated from september 14th in tamil nadu

Next Story
பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லை : அதிரசம் விற்று குடும்ப பொறுப்பை சுமக்கும் சிறுவர்கள்!Madurai brothers selling sweets for family income
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com