/tamil-ie/media/media_files/uploads/2019/10/DSC02610-35.jpg)
cm edappadi palanisamy doctorate
cm edappadi palanisamy doctorate : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் வரும் 20 ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஏ.சி.சண்முகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த பல்கலைக்கழகம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் அதிமுக சின்னத்தில் நின்று சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவிய ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமானது. வரும் 20 ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெறவுள்ளன.
எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் இருக்கும் தகவல் வெளியானது முதல் அதிமுக தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுக் குறித்து சமூகவலைத்தளங்களிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.