ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். சேலத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, நேற்று நள்ளிரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினர்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை காவேரி மருத்துவமனைக்குச் சென்று, கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. தொடர்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனையும் முதல்வர் பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் சென்றிருந்தார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியன் மனதிடத்துடன் உள்ளார் என்றும், மாநாட்டில் அமர்ந்திருப்பதை போல் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் தா.பாண்டியன் விரைவில் நலம் உடல் நலம் பெற்று சேவை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
தா.பாண்டியனை சந்தித்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில், "இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்பிவிடுவார்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 'எனது 40 ஆண்டு கால நல்ல நம்பர் தா.பாண்டியன். விரைவில் பூரண குணம் பெறுவார்' என்றார்.