Election 2019 Live Updates: மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன.
அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இருபெரும் கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது செஞ்சியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
Live Blog
Election 2019 Live Updates
தேர்தல் பிரச்சாரம் லைவ் அப்டேட்ஸ்
மக்களவைத் தேர்ந்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அதனை தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் மீதுள்ள வழக்குகளை, அவர்களது வலைதளங்களில் வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவேன் என்ற மோடி 15 ரூபாயையாவது போட்டிருக்கிறாரா? வாக்குறுதிகளை மட்டும் வாரி வாரி வழங்கும் மோடியால் எதையும் செயல்படுத்த முடியாது. மதசார்பற்ற இந்தியாவை உருவாக்குவேன் என்றீர்களே, செய்தீர்களா? நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவுக்கு நீதி கிடைத்ததா? மகளிர் இட ஒதுக்கீடு என்னாச்சு? - ஸ்டாலின்
தமிழ் சமூகத்தின் நிம்மதியைக் கெடுப்பது, பொய்களை மட்டுமே பேசுவது, கலவரத்தைத் தூண்டுவது இது மட்டும் தான் ஹெச்.ராஜாவின் வேலை. இப்படியானவர் நாடாளுமன்றத்துக்கு சென்றால், அது நாடாளுமன்றத்துக்கும் சிவகங்கை மக்களுக்களாகிய உங்களுக்கும் தான் அவமானம் - மு.க.ஸ்டாலின்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights