திருப்பதி சென்ற எடப்பாடிக்கு நேர்ந்த துயரம்.. சாமி ஆடி முதல்வரை திட்டி தீர்த்த பக்தர்!

கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென்று பக்தி பரசவத்தில் கத்த தொடங்கினார்.

”என்னடா இது தமிழ்நாட்டு முதல்வருக்கு வந்த சோதனை” என்பது போலவே திருப்பதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேர்ந்த  சம்பவம் அவரின் குடும்பத்தாரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வர் பழனிசாமி  சமீபகாலமாக  கோயில் வழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். பழனிசாமி   தன்னைத்தானே கடவுள் என்று  கூறும்படியான விளம்பரம் தியேட்டர்களில் வெளியான நாள் தொடங்கி அவரை சுற்றிய சர்ர்சை  வட்டம் போட தொடங்கியது. எந்த முதல்வரும்  தன்னைத்தானே கடவுள் என்று விளம்பரம் செய்துக் கொள்ளமாட்டார் என்று  எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.

போதாத குறைக்கு நெட்டிசன்கள் ஒரு பக்கம் மீம்ஸ், ட்ரோல் வீடியோவால்  கடவுள் பழனிசாமி விளம்பரத்தை ஒரு கை பார்த்தனர். இந்நிலையில்,  தான் அந்த விளம்பர நிறுத்தப்பட்டது.  அதன் பின்பு,  நேற்று(  14.5.18)  எடப்பாடி குடும்பத்துடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

தமிழ்நாடு முதல்வர் திருப்பதி கோயிலுக்கு  வருவதையொட்டி அங்கு அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  இந்நிலையில் பழனிசாமி சாமி கும்பிடும் போது, கூட்டத்தில் இருந்த  ஒரு நபர் திடீரென்று பக்தி பரசவத்தில் கத்த தொடங்கினார். “வர சொல்லுடா பழனிசாமியை…தமிழ்நாட்டை சீரழிச்சிட்டியே எடப்பாடி…” என்று கத்தியபடி பக்தர் சாமி ஆட தொடங்கினார்.

 

சாமி ஆடி எடப்பாடியை திட்டிய பக்தர்

சாமி ஆடி எடப்பாடியை திட்டிய பக்தர் #EPS #EPSvisitstirupathi //youtu.be/uKtGNIOsxmc

Posted by Dinamalar – World's No 1 Tamil News Website on 15 मे 2018

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத எடப்பாடி மற்றும் அவரின் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்தனர்.  உடனே,  அங்கு வந்த ஆந்திரா போலீசார் சாமி ஆடிய பக்தரை பிடித்து சாந்தப்படுத்த முயற்சித்தனர். இருந்த போது அவர், கோபத்தில் மேலும் கத்த ஆரம்பித்தால் அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.

இதுக் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. நிம்மதி தேடி சாமி தரிசனம் சென்ற எடப்பாடி குடும்பத்தினருக்கு இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

 

நன்றி: தினமலர்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close