‘உயிரென உறவென என்னில் பாதியாய்...’ ஸ்டாலின் - துர்கா 50வது ஆண்டு திருமண நாள்; நேரில் வாழ்த்திய தலைவர்கள்

தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் - துர்கா இருவரும் 50வது ஆண்டு திருமண நாளில் தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் - துர்கா இருவரும் 50வது ஆண்டு திருமண நாளில் தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
MKStalin durga wishes

மு.க.ஸ்டாலினுக்கும், துர்க்காவுக்கும் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற்றது.

தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் - துர்கா இருவரும் 50வது ஆண்டு திருமண நாளில் தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள், கமல்ஹாசன், செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், பெ. சண்முகம், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலினுக்கும், துர்க்காவுக்கும் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - துர்கா 50வது ஆண்டு திருமணநாளைக் கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கு தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் கமல்ஹாசன், செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், பெ. சண்முகம், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். 

Advertisment
Advertisements

இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.

இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் - துர்கா 50வது ஆண்டு திருமணநாளைக் கொண்டாடிவரும் நிலையில், 50 ஆண்டுகளுக்கு முந்தைய அவர்களுடைய திருமண போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - துர்காவதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சி அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய தி.மு.க பொருளாளர் பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது மற்றும் அறிஞர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: