மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, ஸ்டாலினும் அவருடைய சகோதரர் மு.க. அழகிரியும் அப்போது சந்திப்பார்கள் இப்போது சந்திப்பார்கள் என்று யூகங்களும் பேச்சுகளும் பரவி வந்த நிலையில், சமீபத்தில் ஸ்டாலினும் மு.க. அழகிரியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவர்களின் சந்திப்பு ஜஸ்ட் மிஸ் என்பதாக இந்த முறையும் சந்திப்பு நடக்காமல் போயுள்ளது. அது என்ன நிகழ்ச்சி என்றால், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மகன் மு.க.தமிழரசுக்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் திறப்பு விழாவ்ல் கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில்தான், சகோதரர்களின் சந்திப்பு ஜஸ்ட் மிஸ் ஆகி உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான போது மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்தது முதலே முதல்வர் ஸ்டாலினும் அவருடைய அழகிரியும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்களிடையே இருந்து வருகிறது.
ஆனாலும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, இதுவரை தன் அண்ணன் அழகிரியை ஸ்டாலின் சந்திக்கவில்லை. ஸ்டாலின் மதுரை சென்ற போதும் மு.க.அழகிரியை சந்திக்க வில்லை. அதே போல, அழர்கிரி மகன் தயாநிதி அழகிரிக்கு குழந்தை பிறந்தபோது, சகோதரர்கள் இருவரும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திக்கவில்லை. அதே போல, கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், சந்திப்பு நடைபெறவில்லை. இந்த சூழலில்தான், மு.க.தமிழரசுவின் திருமண மண்டபம் திறப்பு மற்றும் பைக் ஷோ ரூம் திறப்பு குடும்ப நிகழ்ச்சி, மு.க. ஸ்டாலினும் மு.க.அழகிரியும் சந்திப்பதற்கு வாய்ப்புள்ள மிக முக்கியமான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியிக்கு அழகிரியும் தனது குடும்பத்துடன் வந்தார். ஆனால், அவர் வருவதற்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின் திருமண மண்டபத்தைத் திறந்து வைத்து விட்டுத் புறப்பட்டு சென்றுவிட்டார். அதனால். இப்போதும் மு.க. ஸ்டாலின் - மு.க. அழகிரி சந்திப்பு ஜஸ்ட் மிஸ் என்பது போல நடைபெறாமல் போனது.
இதனால், திமுகவினர் இடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவருடைய சகோதரர் மு.க.அழகிரியும் எப்போதும் சந்திப்பார்கள் என்ற எதிர்பாப்பு அப்படியே இருந்து வருகிறது.
திமுகவினரின் இந்த எதிர்பார்ப்புக்கு மற்றொரு வாய்ப்பாக, திமுக தலைமையின் அடுத்த குடும்ப நிகழ்ச்சியாக, வருகிற செப்டம்பர் 10ம் தேதி கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்தி திருமண வரவேற்பு விழா சென்னையில் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சில் ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு நடக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"