மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ. 1,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார். மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ. 1,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார்.
அதே போல, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“