Advertisment

மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் நியமனம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக வியூகம்

திமுக தலைமை 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பெற்ற வெற்றியை தொடர்ந்து பெறுவதற்கான திட்டமிடல்களை முன்னெடுத்து வருகிறது.

author-image
WebDesk
Oct 21, 2021 14:40 IST
CM MK Stalin appoints district in-charge ministers, DMK strategy for urban local body polls, urban local body polls, மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் நியமனம், முதல்வர் முக ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக வியூகம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், tamil nadu politics, tamil news, dmk, dmk ministers

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் மாநிலத்தில் 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

Advertisment

திமுக தலைமை 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பெற்ற வெற்றியை தொடர்ந்து பெறுவதற்கான திட்டமிடல்களை முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் அக்டோபர் 27ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் 14 அமைச்சர்களை 16 மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார். வரும் நாட்களில், முதலமைச்சர், அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் நலத்திட்டங்களை கண்காணிக்கவும், வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் அவசர பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்படுகிறது. மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன் அடிமட்ட தொண்டர்களை ஊக்குவிப்பதற்கும் ஒவ்வொரு நகராட்சியின் தேவைகள் குறித்து சரியான கருத்துக்களைப் பெறுவதற்கும் யோசனை இருப்பதாக திமுகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக உயர்மட்ட தலைவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒரு மாவட்டத்திற்குப் அமைச்சர் பொறுப்பாக இருந்தால். அரசாங்கத்த்தின் நலத் திட்டங்கள், நடவடிககிகள் அடிமட்ட மக்களைச் சரியாக சென்றடைய உதவும் என்று கண்டறிந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அமைச்சரை பொறுப்பாளராக நியமிப்பதன் மூலம், அரசின் திட்டங்களை சரியாக கொண்டுபோய் சேர்த்து மக்களின் ஆதரவைப் பெற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற திமுக தலைமை வியூகம் வகுத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Dmk #Local Body Election #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment