Tamilnadu CM MK Stalin, Kamal Haasan Tamil News: தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் (மார்ச் 1ம் தேதி) தி.மு.க-வினரிடையே பெரும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் மார்ச் 1-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 28ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஸ்டலின் கடந்து வந்த பாதையின் புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதனை திறந்து வைக்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இந்து அறநிலைய அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், ‘சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து வந்த பாதையை விளக்கும்படி இருக்கும் எனவும், இந்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹான் வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு ம.நீ.ம கட்சியின் தலைவர் திரு.@ikamalhaasan அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். (2/2)
— P.K. Sekar Babu (@PKSekarbabu) February 26, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil