Advertisment

காலை உணவுத் திட்டம்: ‘ஸ்டாலின் தாத்தா’னு சொன்ன சிறுமி; ‘தாத்தா இல்ல ஸ்டாலின் தான்’ ஜாலியாக பேசிய ஸ்டாலின்: வீடியோ

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, பள்ளிச் சிறுமிகளுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைசர் மு.க. ஸ்டாலின், சிறுமியுடன் ஜாலியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stalin talks with child

பள்ளிச் சிறுமிகளுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைசர் மு.க. ஸ்டாலின், சிறுமியுடன் ஜாலியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் தொடக்க நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளிச் சிறுமிகளுடன் காலை உணவு சாப்பிட்டார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு சிறுமியிடம் என் பெயர் என்ன தெரியுமா என்று கேட்க, அந்த சிறுமி, “ஸ்டாலின் தாத்தா’ என்று கூற, “தாத்தா இல்ல, ஸ்டாலின் தான்” என்று ஜாலியாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று தொடங்கி  வைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.

தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம், 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார்.

அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு சிறுமிக்கு காலை உணவை ஊட்டிவிட்டார். பின்னர், சிறுமியுடன் ஜாலியாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிறுமியிடம், “என் பேரு என்ன தெரியுமாடா?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, “ஸ்டாலின் தாத்தா’ என்று பதில் கூறியது. அதற்கு ஸ்டாலின் சிரித்துக்கொண்டே, “தாத்தா இல்ல, ஸ்டாலின் தான்” என்று ஜாலியாகக் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை சி.எம். டேஷ்போர்டு வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment