பா.ஜ.க.வுக்கு ஒரிஜினல் வாய்ஸ்போல இ.பி.எஸ் பேச்சு: திருவாரூரில் ஸ்டாலின் விமர்சனம்

பா.ஜ.க.வுக்கு டப்பிங் வாய்ஸ்போல பேசிய பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச தொடங்கியுள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க.வுக்கு டப்பிங் வாய்ஸ்போல பேசிய பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச தொடங்கியுள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
mk stalin attack eps

பா.ஜ.க.வுக்கு ஒரிஜினல் வாய்ஸ்போல இ.பி.எஸ் பேச்சு: திருவாரூரில் ஸ்டாலின் விமர்சனம்

பா.ஜ.க.வுக்கு டப்பிங் வாய்ஸ்போல பேசிய பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச தொடங்கியுள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Advertisment

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் (ஜூலை 9) இன்றும் (ஜூலை 10) இரண்டு நாள் ஆய்வுப் பணிகளை முதல்வர் மு க ஸ்டாலின் மேற்கொண்டார். அனைத்து சாலை மாற்றுமாக பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின், இன்று பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.846.47 கோடிக்கு ஆயிரத்து 234 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 2423 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 67 ஆயிரத்து 181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், 6 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

பின்னர் நடந்த கூட்டத்தில் பேசியதாவது; திருவாரூர் மாவட்ட மக்கள் அனைவருமே எங்களில் ஒருவன் என என்னை அன்போடு அழைக்கிறார்கள். கலைஞர் ஆட்சியின் நீட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. திருவாரூர் என்றாலே தேரும், தலைவர் கலைஞரும்தான் நினைவுக்கு வரும். இந்த மண்ணில் பிறந்த கலைஞர்தான் தனது அறிவால், ஆற்றலால் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று, தொலை நோக்குப் பார்வையால் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியிருக்கிறார் என்றார்.

மேலும் மத்திய ஆட்சியின் இடையூறுகளையும் சமாளித்து, திராவிட மாடல் அரசு செய்து வருகின்ற சாதனைகளை சகித்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு என்று பெயர் சொல்வதைக் கூட தவிர்த்துக் கொள்பவர்களுடன் தற்போது சேர்த்துவிட்டார். அவர் தமிழகத்தை மீட்போம் எனக் கூறி பயணத்தை தொடங்கி இருக்கிறார். முதலில் அதிமுகவையே மீட்க முடியாதவர். தமிழகத்தை மீட்க போகிறேன் என்கிறார்.

Advertisment
Advertisements

பழனிசாமி அவர்களே, தங்களிடமிருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது. கூவத்தூரில் ஏலம் எடுத்து, கலெக்ஷன், கரெப்சன், கமிஷன் என்றுகூறி தமிழகமே பார்க்காத அவலமான ஆட்சி நடத்தினீர்கள். செய்த குற்றங்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டையும், தமிழர்களின் உரிமையையும் அடகு வைத்தீர்கள். நீங்கள் செய்தது ஒன்றா, இரண்டா அவற்றை எல்லாம் சரி செய்து, தமிழகத்தை இந்தியாவிலே நம்பர் ஒன் இடத்தைப் பெற்று, 9.69 % வளர்ச்சியை பெறச்செய்துள்ளோம்.

வெளிமாநில மக்கள் எல்லாம் தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாக பேசும் நிலையை உருவாக்கி இருக்கிறோம். இதெல்லாம், பழனிசாமிக்கு தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் துரோகம் செய்வது மட்டும்தான். உங்களைக் கொண்டு வந்தவர்களை துரோகம் செய்து வெளியில் அனுப்பினீர்கள். உங்களை நம்பி இருந்த கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கூட்டணி அமைத்தீர்கள். ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் துரோகம் செய்தீர்கள்.

மத்திய அரசு தமிழகத்துக்கு நிதியை கொடுப்பதில்லை. நாம் கொடுக்கின்ற ஜி.எஸ்.டி. வரிக்கான நிதியையும் கொடுப்பதில்லை. சிறப்பு திட்டங்கள் எதுவும் கொடுப்பதில்லை மத்திய அரசின் திட்டங்களுக்கே தமிழக அரசுதான் நிதி கொடுத்து வருகிறது. நமது தமிழக மாணவர்கள் படிப்பதற்கான நிதியை கொடுக்கவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் கல்வி நிதியை கொடுக்கும் நிலையில், தமிழகத்துக்கு மட்டும் அந்த நிதி கொடுப்பதில்லை. தமிழகத்தின் பெருமையை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர்.

அதுமட்டுமா தொகுதி மறுவரையறை பிரச்னை, வாக்காளர் பட்டியலில் குளறுபடி இப்படி தமிழகத்துக்கு எல்லா வகையிலும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கூச்சமே இல்லாமல் பயணிக்க முடிகிறது. அறநிலையத் துறையின் மூலம், கல்லூரிகள் கட்டக்கூடாது என்கிறார். முன்பெல்லாம் பா.ஜ.க.வுக்கு டப்பிங் வாய்ஸ் பேசிக் கொண்டிருந்தார். தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேசத் தொடங்கி விட்டார்.

அறநிலையத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்க சட்டம் உள்ளது. மறைந்த பக்தவச்சலம் தொடங்கி இந்தச் சட்டம் உள்ளது. எம்.ஜி.ஆர். பழனியாண்டவர் கல்லூரியைத் தொடங்கி வைத்தார். அதே கல்லூரியில் கூடுதல் கட்டிடங்களை நீங்கள் கடந்த ஆட்சியில் சென்று திறந்து வைத்தீர்கள். நாங்கள் திறந்துவைத்தால் மட்டும் தவறா? பா.ஜ.க. தலைவர்களே இதுபோன்று கல்லூரி திறக்கக் கூடாது எனப் பேசுவதில்லை. ஆனால் பழனிசாமி பேசுவதை பார்த்து கொடுத்த காசுக்கு மேல கூவுறான் என்ற வடிவேலு பட வசனத்தை சொல்லி பழனிசாமியை கிண்டல் செய்கிறார்கள்.

அறநிலையத்துறை சாதனைகள் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைவிட அதிக பட்டியல் கொண்டது. ஏன் உங்களுக்கெல்லாம் படிப்பு என்றால் அவ்வளவு கசக்கிறது. உங்களுக்கு படிப்பின் மேல் அவ்வளவு அக்கறை இருந்தால் கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் பல்கலைக் கழகம் தொடங்க சட்டம் இயற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்து 2 மாதம் ஆகிறது. இதுவரை அனுமதி தரவில்லை. நீங்கள் அனுமதி தந்தாலும் தராவிட்டாலும், நாங்கள் சட்டத்தின் வழியில் நின்று, கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்போம்.

எனவே, மக்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசிக்கொண்டு, தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து நீங்கள் எந்தப் பயணம் செய்தாலும், மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அதுதான் உங்களுடைய வரலாறு. தமிழகத்தை வஞ்சிக்கும் சக்திகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும் ஆனால், மக்களாகிய நீங்கள், ஓரணியில் தமிழ்நாடு என்று எங்கள் பக்கம் நிற்க வேண்டும். நம்முடைய மண், மொழி, மானம் காக்க என்றைக்கும் திமுகவும், நானும் துணை நிற்போம் என்றார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் வரவேற்றார். அமைச்சர்கள் கே.என். நேரு, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், டிஆர்பி. ராஜா, அன்பில் மகேஸ், சிவ.வீ.மெய்யநாதன், கோ.வி.செழியன், பூண்டி கலைவாணன் எம்எல்ஏ மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

திருவாரூர் நகர்ப் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம், நன்னிலம் பகுதியில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும், மன்னார்குடியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால், ஆறுகள் ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும், பூந்தோட்டம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்த நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Thiruvarur Mk Stain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: