கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த கேன்டிடேட் செஸ்போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர், தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.
1984ம் ஆண்டு ரஷ்ய செஸ் ஜாம்பியன் கேரி காஸ்பரோவ், அவரது 20 வயதில் கேன்டிடேட் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே முந்தைய சாதனை ஆக இருந்தது. இந்நிலையில் இந்த சாதனையை குகேஷ் முறியடித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சதிற்கான காசோலையை குகேஷிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.