முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதானியை சந்தித்தது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு, அவருக்கு வேறு வேலை இல்லை, அவருக்கு இப்போது வேற வேலை இல்லை. தினமும் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஓகே” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது, அதனுடைய நகர்வு தமிழ்நாட்டை நோக்கி இருக்கும் என்று கூறுகிறார்கள். பெருமழையை எதிர்பார்க்கிறோமா? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பெருமழையை எதிர்பார்க்கிறோம், எதிர்பார்க்கல அது வேற, நாங்கள் தயாராக இருக்கிறோம். எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு தேவையான நிதி, மற்ற உரிமைகள் தொடர்பாக எழுப்ப தி.மு.க உறுப்பினர்களுக்கு என்ன அறிவுறுத்தியுள்ளீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டி வைத்து, என்னென்ன்ன பேச வேண்டும் என்று தீர்மானங்களைப் போட்டு அவர்களிடம் கொடுத்திருக்கிறோம். அதை வலியுறுத்தி பேச வேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் பேசுவார்கள்” என்று கூறினார்.
அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டில் சந்தித்ததாகக் கூறுகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “துறையினுடைய அமைச்சரே சொல்லியிருக்கிறார். நீங்கள் டுவிஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்காதீர்கள்” என்று கூறினார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அதானி யாரை வந்து சந்தித்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அவருக்கு இப்போது வேற வேலை இல்லை. தினமும் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஓகே” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றாத்தில் லஞ்சப் புகார் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கு ஆவணத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட பா.க.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும், மேலும், “அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.” என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
டாக்டர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு, அவருக்கு வேறு வேலை இல்லை, அவருக்கு இப்போது வேற வேலை இல்லை. தினமும் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஓகே” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதை ஏற்க முடியாது என்றும் முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், ராமதாஸ் குறித்து முதல்வர் ஆணவத்துடன் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் ஆணவத்துடன் பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.