தமிழ்நாட்டை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத் மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், “தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடி டாலர் கனவுக்கான உலகளாவிய பாராட்டு, எங்கள் வெற்றிக்கான பயணத்தை தூண்டுகின்றன. உயர்ந்த இலக்கை அடைவோம், முதலீடுகளை ஈர்ப்போம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் (ஜன.7,2024) நாளையும் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி முதலீட்டை இருக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதற்கு முன் 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது முறையே ரூ.2,42,160 கோடி மற்றும் ரூ.3 லட்சத்து 501 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“