தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல் காரணமாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/21/unnamed-2025-07-21-14-09-40.jpg)
அவரைக் காண துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்தனர்.
முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினரும் குவிக்கப்பட்டு, மாற்றுப் பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்டாலின் இன்று கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.