/indian-express-tamil/media/media_files/2025/08/15/cm-mk-stalin-wishes-2025-08-15-10-41-43.jpg)
“ஜனநாயகம் திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் மதிப்பு இருக்கிற, வேற்றுமையே நமது பெரும் வலிமையெனக் கொண்டாடப்படுகிற நாட்டினைக் கட்டமைப்பதற்கான மனவுறுதியை மேலும் வலுப்படுத்திக் கொள்வோம்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “உண்மையான விடுதலை என்பது மதவெறியை நிராகரிப்பது, பாகுபாடுகளுக்கு முடிவு காண்பது, விளிம்பு நிலையில் உள்ளோரை பாதுகாப்பது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜனநாயகம் திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் மதிப்பு இருக்கிற, வேற்றுமையே நமது பெரும் வலிமையெனக் கொண்டாடப்படுகிற நாட்டினைக் கட்டமைப்பதற்கான மனவுறுதியை மேலும் வலுப்படுத்திக் கொள்வோம்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (15.08.2025) கொண்டாட்டப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உண்மையான விடுதலை என்பது மதவெறியை நிராகரிப்பது, பாகுபாடுகளுக்கு முடிவு காண்பது, விளிம்பு நிலையில் உள்ளோரை பாதுகாப்பது” என்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“சக குடிமக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜனநாயகம் திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் மதிப்பு இருக்கிற, வேற்றுமையே நமது பெரும் வலிமையெனக் கொண்டாடப்படுகிற நாட்டினைக் கட்டமைப்பதற்கான மனவுறுதியை இந்நாளில் நாம் மேலும் வலுப்படுத்திக் கொள்வோம்!
உண்மையான விடுதலை என்பது மதவெறியை நிராகரிப்பது, பாகுபாடுகளுக்கு முடிவு காண்பது, விளிம்பு நிலையில் உள்ளோரைப் பாதுகாப்பது! ஒவ்வொரு மனிதரும் சமத்துவத்தோடும், மாண்போடும், மரியாதையோடும் வாழ முடிகிற வகையில், நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் காண விரும்பிய கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதுதான் உண்மையான விடுதலையாக இருக்கும்” என்று முதலமைசர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.