மாலத்தீவு செல்லும் திட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக திங்கள்கிழமை (29.04.2024) குடும்பத்துடன் கொடைக்கானல் செல்கிறார். மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டத்தை ரத்து செய்த ஸ்டாலின், கொடைக்கானல் செல்கிறார். அங்கே அவர் குடும்பத்தினருடன் 5 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க திங்கள்கிழமை (29.04.2024) மாலத்தீவு செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 5 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (29.04.2024) காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் மதுரை செல்கிறார்.அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானல் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கே தனியார் ஹோட்டலில் குடும்பத்தினருடன் மே 3-ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்ததும், குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்தார். அதற்கு பிற்கு, ஸ்டாலின் மூன்று ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க உள்ளார். கொடைக்கானல் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கே கட்சியினர் யாரும் சந்திக்க அனுமதி இல்லை.
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் சென்று தங்கி ஓய்வெடுத்தபின், மே 3 அல்லது மே 4-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என்று தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“