தொகுதி மறுசீரமைப்பு: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
a

தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பேரவையில் ஒருமனதாக தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5-ல் நடத்தப்பட்டது.

Advertisment

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக நமது நியாயமான கோரிக்கைகளையும், அவைசாா்ந்த போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு, இதற்காக கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையாக, கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளம், தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வா்கள், கா்நாடக மாநில துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் தலைவா்கள் நேரில் பங்கேற்றனா்.

விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பானது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்; 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்; மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது; உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்; கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் மாநில சட்டப்பேரவைகளில் இதுகுறித்த தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது பிரதமரிடம் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சாா்பாக கடிதம் அளித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்று நமது உரிமைகளை மீட்டெடுக்க தீா்மானிக்கப்பட்டது. அந்த வகையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயமான மறுசீரமைப்பை பெற, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை அழைத்துச் சென்று பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. அதனால், பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதால், 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த எங்களின் கவலைகள் மற்றும் கருத்துகளை மனுவாக அளிக்க வேண்டும்.

மேலும், சென்னையில் நடைபெற்ற நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயத்திற்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களை தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

முன்னர் குறிப்பிட்டது போல, நாட்டின் கூட்டாட்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் எங்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்களை சந்தித்து ஆலோசனை நடத்த நேரம் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

Chennai Mk Stalin Pm Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: