தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் ஞாயிற்றுக் கிழமை நேரில் சந்தித்து பேசினார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
Advertisment
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சித்துறையில் முன்னேற்ற, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த சூழலில், நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவர், முதல்வரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Advertisment
Advertisements
Chairman of @TataCompanies Thiru. N. Chandrasekaran paid me a courtesy call at my Camp Office.
இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஸ்டாலின், ”என்.சந்திரசேகரன் என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருக்கு விருந்தோமல் செய்வது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அதில் குறிப்பிள்ளார்.”
டாடா குழுமத் தலைவர், தமிழக முதல்வரை சந்திப்பது இது முதல்முறையல்ல, ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மு.க. ஸ்டாலினை, நடராஜன் சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார்.
உலகெங்கிலும் வேலையிழப்பு அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், டாடா நிறுவனத்தில் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“