/indian-express-tamil/media/media_files/2025/09/02/cm-mk-stalin-advice-2025-09-02-19-58-50.jpg)
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது திராவிட மாடல் அரசு அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு அமைச்சர்கள் விளக்கியுள்ளனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது திராவிட மாடல் அரசு அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு அமைச்சர்கள் விளக்கியுள்ளனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், “முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
“தி.மு.க-வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடம் 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் தற்போது நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படாதவை” என தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டங்களின் செயலாக்கம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் கூட்டாக விளக்கினர்.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், “முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்” என்று மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
🌄 சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்!
— M.K.Stalin (@mkstalin) September 2, 2025
🌟 தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது #DravidianModel அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு மாண்புமிகு அமைச்சர்கள் @TThenarasu,… pic.twitter.com/j0fQUUwGxE
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ச் சமூகவலைதளப் பதிவில், “தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது திராவிட மாடல் அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் விளக்கியுள்ளனர்.
இன்னும் ஒருபடி மேலே சொன்னால், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, நான்முதல்வன் திட்டம், புதுமைப் பெண் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவை.
முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்.
அணுகல்தன்மை (Accessibility)
பொறுப்புக்கூறல் (Accountability)
வெளிப்படைத்தன்மை (Transparency)
அனைவரையும் உள்ளடக்கிய தன்மை (Inclusivity)
பொறுப்பு (Responsibility)
நிலைத்தன்மை (Sustainability)
இதுதான் தி.மு.க.” என்று முதலமைச்சர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தி.மு.க-வின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை விடியல் எங்கே என்ற தலைப்பில், ஆவணப் புத்தகம் வெளியிட்டார். அந்த நிகழ்வில் பேசிய அன்புமணி, “தி.மு.க தேர்தலுக்கு முன்பு அவர்கள் தேர்தல் அறிக்கையிலே கொடுத்த வாக்குறுதிகள் 505. அதில் அவர்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66, அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் 373. நாங்கள் 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று ஒரு பொய்யை முதலமைச்சர் மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.