/indian-express-tamil/media/media_files/2025/10/29/mk-stalin-weight-lift-2025-10-29-06-23-56.jpg)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மகாராஜன் ஆறுமுகப்பாண்டியனின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், பயிற்சிக்கும் திராவிட மாடல் அரசு துணைநிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் நடைபெறும் ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன், ஸ்னாட்ச் பிரிவில் 114 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 142 கிலோ எடையைத் தூக்கி 2-ம் இடம் பிடித்தாா்.
பளுதூக்குதலில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மகாராஜன் ஆறுமுகபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி, #AsianYouthGames2025-இல் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தம்பி மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 28, 2025
முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையைத் திறந்து வைக்க,… https://t.co/4vGH1hXIkq
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எக்ஸ் பக்கத்தில் மகாராஜன் ஆறுமுகப் பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருப்பதாவது: “கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி, ஆசிய இளையோர் விளையாட்டு 2025-ல் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தம்பி மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!
முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையைத் திறந்து வைக்க, கோவில்பட்டிக்கு நான் வந்திருக்கும் வேளையில், இந்த இனிய செய்தியைப் பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்கிறேன்.
உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், பயிற்சிக்கும் நமது திராவிட மாடல் அரசு துணைநிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இதனிடையே, மகளிருக்கான மெட்லி ரிலேவில் தமிழகத்தைச் சேர்ந்த எட்வினா ஜேசன், சௌா்ய அவினாஷ் அம்புரே, தன்னு, பூமிகா சஞ்சய் நெஹாதே ஆகியோா் அடங்கிய இந்திய அணி 2 நிமிஷம், 9.65 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளி பதக்கம் பெற்றனர்.
நெல்லை மகள் எட்வினா ஜேசன் இன்னும் நெடுந்தூரம் ஓடி, மென்மேலும் பதக்கங்களைத் தேடிட வாழ்த்துகிறேன்.#AsianYouthGames2025https://t.co/e4RQGxuh4R
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 28, 2025
இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “நெல்லை மகள் எட்வினா ஜேசன் இன்னும் நெடுந்தூரம் ஓடி, மென்மேலும் பதக்கங்களைத் தேடிட வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us