காரைக்குடியில் முதல்வரின் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் களஆய்வு செய்வதற்காக காரைக்குடிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (21.01.2025) காலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர் தமிழ் நூலகத்தையும், அய்யன் திருவள்ளுவரின் சிலையும் திறந்து வைத்து, நூல் வெளியீட்டு விழாவில் பேருரை ஆற்றினார்.
தொடர்ந்து அழகப்பா விருந்தினர் மாளிகையில் இருந்து கல்லூரி சாலை, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம், தேவர் சிலை வழியாக தனியார் மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க கட்சி நிர்வாகிகளுடன் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் முதல்வரை காண (ரோட் ஷோ) சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தி.மு.க-வினர் கட்சி கொடி ஏந்தி நாட்டுப்புற கலைஞர்கள் உற்சாக நடனத்தை கண்டு ரசித்தனர்.